இந்தியா-இங்கிலாந்து டி20, ஓடிஐ தொடர்; போட்டிகள் தொடங்கும் நேரம்? எதில் பார்க்கலாம்? முழு அட்டவணை!

Published : Jan 11, 2025, 07:16 PM ISTUpdated : Jan 13, 2025, 08:25 AM IST

இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஓடிஐ தொடர்களில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான முழு அட்டவணை, போட்டிகள் தொடங்கும் நேரம் உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

PREV
14
இந்தியா-இங்கிலாந்து டி20, ஓடிஐ தொடர்; போட்டிகள் தொடங்கும் நேரம்? எதில் பார்க்கலாம்? முழு அட்டவணை!
India England Series

இந்தியா-இங்கிலாந்து தொடர் 

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்ற இந்திய அணி 3 போட்டிகளில் படுதோல்வி அடைந்தது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. அணியின் தோல்விக்கு காரணமான கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அடுத்த மாதம் 'மினி உலகக்கோப்பை' எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்திய அணி சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஓடிஐ போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. 
 

24
India England ODI Series

போட்டிகள் எந்தெந்த நாட்கள்?

2வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 25ம் தேதி நடைபெறுகிறது. 3வது டி20 போட்டி வரும் 28ம் தேதி ராஜ்காட்டிலும், 4வது டி20 போட்டி வரும் 31ம் தேதி புனேவிலும், 5வது போட்டி பிப்ரவரி 2ம்தேதி மும்பையிலும் நடைபெற உள்ளன. 50 ஓவர் ஒருநாள் போட்டித் தொடரை பொறுத்தவரை முதல் போட்டி முதல் போட்டி பிப்ரவரி 6ம் தேதி நாக்பூரில் நடைபெற இருக்கிறது. 2வது ஓடிஐ பிப்ரவரி 9ம் தேதி கட்டாக்கிலும், 3வது ஓடிஐ பிப்ரவரி 12ம் தேதி அகமதாபாத்திலும் நடைபெற உள்ளன.

Happy Birthday 'The Wall'; ராகுல் டிராவிட்டின் டாப் 5 டெஸ்ட் இன்னிங்ஸ்கள்! மறக்க முடியுமா?
 

34
India England T20 Series

எதில் பார்க்கலாம்?

இந்தியா-இங்கிலாந்து இடையிலான டி20 போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும். ஓடிஐ போட்டிகள் இந்திய நேரப்படி நண்பகல் 1.30 மணிக்கு தொடங்கும். இந்த டி20 மற்றும் ஓடிஐ தொடர் போட்டிகள் அனைத்தையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும சேனல்களில் பார்க்கலாம். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் தமிழ் வர்ணனையுடன் போட்டிகளை கண்டு ரசிக்கலாம். மேலும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திலும் போட்டிகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.

44
England Squad

இங்கிலாந்து அணி அறிவிப்பு 

இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அனேகமாக இந்திய அணி நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணியில் டி20 மற்றும் ஓடிஐ என இரு தொடர்களுக்கும் ஜோஸ் பட்லர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து டி20 மற்றும் ஓடிஐ அணி:‍ ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், பென் டக்கெட், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டன், ரெஹான் அகமது, ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜேமி ஸ்மித், பிலிப் சால்ட், கஸ் அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் வுட் மற்றும் சாகிப் மஹ்மூத். 

கோ கோ உலகக்கோப்பை 2025: 'இதற்கு தான் காத்திருந்தேன்'; இந்திய கேப்டன் பிரதிக் வைக்கர் பிரத்யேக பேட்டி!
 

 

 


 

click me!

Recommended Stories