ஒருவழியாக இந்திய அணியில் இடம்பிடித்த ஷமி; பாண்ட்யாவுக்கு 'ஷாக்'; டி20 வீரர்கள் லிஸ்ட் இதோ!

First Published | Jan 12, 2025, 9:47 AM IST

இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்? என்பது குறித்த முழு விவரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம். 

Indian Cricket Team

இந்தியா இங்கிலாந்து தொடர் 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாட உள்ளது. இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. 2வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 25ம் தேதி நடைபெறுகிறது. 

3வது டி20 போட்டி வரும் 28ம் தேதி ராஜ்காட்டிலும், 4வது டி20 போட்டி வரும் 31ம் தேதி புனேவிலும், 5வது போட்டி பிப்ரவரி 2ம்தேதி மும்பையிலும் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து நடைபெறும் 50 ஓவர் ஒருநாள் போட்டித் தொடரில் முதல் போட்டி பிப்ரவரி 6ம் தேதி நாக்பூரில் நடைபெற இருக்கிறது. 2வது ஓடிஐ பிப்ரவரி 9ம் தேதி கட்டாக்கிலும், 3வது ஓடிஐ பிப்ரவரி 12ம் தேதி அகமதாபாத்திலும் நடைபெற உள்ளன.
 

Mohammed Shami

முகமது ஷமி விளையாடுகிறார்

அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்த இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதனால் இங்கிலாந்து தொடரில் வெற்றி பெற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. அதுமட்டுமின்றி அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ள நிலையில், இங்கிலாந்து தொடரில் வெற்றி பெற்றால், சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க இந்திய அணிக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும்.

இந்நிலையில், இங்கிலாந்து டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணியில் பும்ராவுக்கு அடுத்து சிறந்த பவுலராக இருக்கும் முகமது ஷமி சுமார் 14 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளார். காயம் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக கிரிக்கெட் விளையாடாத ஷமி, நீண்ட இடைவெளிக்கு பிறகு திரும்பியுள்ளார். அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே வேளையில் அக்சர் படேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்தியா-இங்கிலாந்து டி20, ஓடிஐ தொடர்; போட்டிகள் தொடங்கும் நேரம்? எதில் பார்க்கலாம்? முழு அட்டவணை!

Tap to resize

Hardik Pandya

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஷாக் 

சில டி20 தொடரில் இந்திய அணி கேப்டனாகவும், துணை கேப்டனாகவும் இருந்த ஹர்திக் பாண்ட்யாவுக்கு இங்கிலாந்து தொடரில் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. ஆஸ்திரேலியா தொடரில் சூப்பர் சதம் விளாசி அதிரடியை வெளிப்படுத்திய நிதிஷ் குமார் ரெட்டி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி என 2 பேருக்கும் இடம் கிடைத்துள்ளது. விக்கெட் கீப்பர்கள் இடத்தில் சஞ்சு சாம்சன், துருவ் ஜூரல் உள்ளனர். 

தென்னாப்பிரிக்க டி20 தொடரில் 2 சதம் விளாசிய திலக் வர்மா தனது இடத்தை உறுதி செய்துள்ளார். இந்திய அணியின் மூத்த ஸ்பின் பவுலர் யுஸ்வேந்திர சஹல் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ரவி பிஸ்னோய் இடம்பிடித்துள்ளார். இதேபோல் அதிரடி வீரர் ரிஷப் பண்ட்டுக்கு இடம் கிடைக்கவில்லை. இப்போது இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இங்கிலாந்து ஓடிஐ தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

India England Series

இந்திய அணி வீரர்கள் லிஸ்ட் 

இந்திய டி20 அணி:‍ சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் மற்றும் துருவ் ஜூரல்.

இந்திய தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி வீரர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டனர். டி20 மற்றும் ஓடிஐ என இரு தொடர்களுக்கும் ஜோஸ் பட்லர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து டி20 மற்றும் ஓடிஐ அணி:‍ ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், பென் டக்கெட், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டன், ரெஹான் அகமது, ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜேமி ஸ்மித், பிலிப் சால்ட், கஸ் அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் வுட் மற்றும் சாகிப் மஹ்மூத்.  

India England Series Live Streaming

எதில் ஒளிபரப்பாகிறது?

இந்தியா-இங்கிலாந்து இடையிலான டி20 போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும். ஓடிஐ போட்டிகள் இந்திய நேரப்படி நண்பகல் 1.30 மணிக்கு தொடங்கும். இந்த தொடர் முழுவதையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் உள்பட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும சேனல்களில் பார்க்கலாம். டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திலும் கண்டு ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கோ கோ உலகக் கோப்பை: 'சவாலுக்கு நாங்கள் ரெடி'; பிரியங்கா இங்கிள் உற்சாகம்; பிரத்யேக பேட்டி!

Latest Videos

click me!