MS Dhoni: பிடித்த மைதானம் எது? பேட்டிங் பிளான் என்ன? மனம் திறந்த தோனி! முழு விவரம்!

Published : Mar 24, 2025, 02:05 PM ISTUpdated : Mar 24, 2025, 02:51 PM IST

சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனி சிஎஸ்கே குறித்தும், தன்னுடைய கிரிக்கெட் அணுகுமுறை குறித்தும் பேசியிருக்கிறார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

PREV
15
MS Dhoni: பிடித்த மைதானம் எது? பேட்டிங் பிளான் என்ன? மனம் திறந்த தோனி! முழு விவரம்!

MS Dhoni Interview about CSK: ஐபிஎல்லில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி மும்பையை வீழ்த்தியது. இந்நிலையில், சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனி சென்னை குறித்தும் சிஎஸ்கே அணி, ரசிகர்கள் குறித்தும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்  JioHotstar-ல் "The MSD Experience" நிகழ்ச்சியில் பேசிய எம்.எஸ். தோனி, TATA IPL ரசிகர்களிடம் பெற்றிருக்கும் பேராதரவைப் பற்றி உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்து கொண்டார். 

25
MS Dhoni, CSK, Cricket

இது தொடர்பாக பேசிய அவர், ''நான் எப்போதும் கூறுகிறேன், இது ரசிகர்களிடமிருந்து ஒரு பெரிய 'நன்றி'யாகும். நான் எதைக் கண்டுகொள்கிறேன் என்றால், அவர்கள் எனக்கு நன்றி தெரிவிக்க ஒரு வகை. கடந்த சில ஆண்டுகளாக நான் விளையாடி வருகிறேன், இன்னும் எவ்வளவு நாட்கள் விளையாடுவேனோ தெரியாது, ஆனால் அவர்கள் காட்டும் அன்பும் ஆதரவும் வியக்கத்தக்கது. ஒரு விளையாட்டு வீரராக, நீங்கள் விரும்புவதும் எதிர்பார்ப்பதும் ரசிகர்களின் பாராட்டுதான் தான்'' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ''கிரிக்கெட்டிற்காக இந்தியா மிகப்பெரிய மேடையாக இருக்கிறது. நான் இன்டர்நேஷனல் கிரிக்கெட் விளையாடவில்லை, எனவே IPL எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு. எனது பெயரை அழைக்கிறார்கள், உற்சாகமாக காத்திருக்கிறார்கள். நான் அவர்களின் அணிக்கு எதிராக விளையாடினாலும் கூட சிறப்பாக ஆட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்'' என்று தெரிவித்தார்.
 

35
CSK vs MI, IPL 2025

தனக்கு பிடித்த கிரிக்கெட் மைதானம் குறித்து குறித்து பேசிய அவர், '' சேப்பாக்கம் என்னை மிகவும் உற்சாகப்படுத்தும் மைதானம். ஏனெனில் ரசிகர்கள் விசிலுடன் மிகவும் அதளிக்கிறார்கள். மும்பைக்கு எனக்கு ஒரு தனி மதிப்பு உண்டு. 2007ல் நாம் T20 உலகக் கோப்பையை வென்றபோது, இங்கு வந்தோம், மிகுந்த வரவேற்பு கிடைத்தது. 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியும் மும்பையில்தான் நடந்தது, எனவே அது என் மனதில் ஒற்றுமை ஏற்படுத்தியது. 

அதேசமயம், பெங்களூருவில் ரசிகர்கள் மிகப்பெரிய ஆரவாரத்தை உருவாக்குகிறார்கள், கொல்கத்தாவில் மிகப்பெரிய மைதானம் இருப்பதால் முழு ரசிகர்கள் அதுவே ஒரு அலாதியான உணர்வை தருகிறார்கள். அகமதாபாத்தும் தற்போது மிகவும் பிரம்மாண்டமான மைதானமாக மாறியுள்ளது. ஒவ்வொரு நகரமும் தனித்துவமான பாராட்டுகளை வழங்குகிறது, எனவே நான் ஒரே ஒரு மைதானத்தை மட்டும் தேர்வு செய்வது கடினம்'' என்றார்.

Ball Tampering: சிஎஸ்கே வீரர்கள் பந்தை சேதப்படுத்தினார்களா? பரபரப்பு வீடியோ! 2 ஆண்டு தடை?

45
MS Dhoni, chennai

தனது பேட்டிங் அணுகுமுறை குறித்து பேசிய தோனி, ''நான் களமிறங்கும்போது, ஸ்கோர்போர்டை கவனிக்கிறேன். அணி என்னைப் பார்த்து என்ன எதிர்பார்க்கிறது என்பதை புரிந்துகொள்கிறேன். சில பந்துகளே மீதமாக இருந்தால், பெரிய ஷாட்கள் விளையாடுவது மட்டுமே என் குறிக்கோளாக இருக்கும். ஒரு பவுண்டரிக்குப் பதிலாக ஒரு சிக்ஸ் அடித்தால் அந்த இரண்டு ரன்கள் கூட பலமான மாற்றத்தை ஏற்படுத்தும். அதேபோல, பவுலர்களிடமும் நான் எப்போதும் கூறுவது: 'நீங்கள் 4 பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தாலும், 6வது பந்து "டாட்" ஆக இருந்தால், அது நமக்கு வெற்றி தரும்' என்பதுதான்'' என்று விவரித்தார்.

சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் குறித்து பேசிய தோனி, ''தீவிரமான திட்டமிடலே முக்கியம். பல ஆண்டுகளாக CSK அணியில் ருத்ராஜ் இருக்கிறார். அவருடைய மனநிலை அமைதியானது. அதை நாங்கள் கவனித்தோம். உண்மையில் 99% முடிவுகளை அவரே எடுத்தார். நான் அவருக்கு வழிகாட்டினேன், ஆனால் ஒவ்வொரு முக்கியமான முடிவுகளும் அவருடையதுதான். அவர் மிக சிறப்பாக இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார்'' என்று தெரிவித்தார்.

55
MS Dhoni, CSK vs RCB, Virat Kohli


இப்போதைய கிரிக்கெட் குறித்து பேசிய தோனி ''2008ல் எப்படி T20 ஆடினோம். 2024ல் எப்படி ஆடுகிறோம்—இதில் பெரும் வேறுபாடு உள்ளது. மைதானங்கள் மாறிவிட்டன, பந்தின் தன்மையும் மாறிவிட்டது, தற்போது அதிகம் ரன்கள் வருகிறது. அதேசமயம், பேட்ஸ்மேன்கள் புதிதாக முயற்சிக்கிறார்கள், நவீன ஷாட்களை முயற்சிக்கிறார்கள். நாமும் மாறித்தான் ஆட வேண்டும், இல்லையென்றால் விளையாட்டில் நிலைத்து நிற்க முடியாது'' என்றார். 

விராட் கோலிக்கும் தனக்கும் உள்ள உறவு குறித்து விவரித்த தோனி, ''விராட் எப்போதும் சிறப்பாக ஆட விரும்புவார். வெறும் 40-60 ரன்கள் எடுத்தால் திருப்தியடைய மாட்டார். அவர் தனது விளையாட்டை தொடர்ந்து மேம்படுத்தினார். ஆரம்பத்தில் அவர் ஒரு இளம் வீரராக இருந்தபோதும், எங்களுக்குள் மிக நேர்மையான உரையாடல்கள் நடந்தன. தற்போது இருவரும் கேப்டன் இல்லை, எனவே போட்டிகளுக்கு முன் நீண்ட நேரம் பேச முடிகிறது. ஒரு மூத்த மற்றும் இளைய வீரருக்குள் இருக்கும் மரியாதையும் நட்பும் எங்களுக்குள் உள்ளது'' என்று பேசி முடித்தார்.

CSK vs RCB மேட்ச் டிக்கெட் விற்பனை தொடங்கும் தேதி இதுதான்! எப்படி புக் செய்வது?

Read more Photos on
click me!

Recommended Stories