
CSK vs RCB Ticket Sales Date Announcement: உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி முதல் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. இதுவரை 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிஎஸ்கே-ஆர்சிபி மேட்ச் டிக்கெட் விற்பனை
அடுத்து சிஎஸ்கே அணி சென்னை சேப்பாக்கத்தில் வரும் 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (மார்ச் 25) தொடங்கும் என சிஎஸ்கே அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது மார்ச் 28ம் தேதி நடக்கும் சென்னை-ஆர்சிபி போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை மார்ச் 25 (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு www.chennaisuperkings.comஎன்ற சிஎஸ்கேவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொடங்கும்.
சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ரூ.1700 முதல் தொடங்கி ரூ.75000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது C/D/E Lowerகேலரிக்கு ரூ.1,700 டிக்கெட் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 1/J/K Upperகேலரிக்கு 2,5000 ரூபாயும், 1/J/K Lowerகேலரிக்கு 4,0000 ரூபாயும், C/D/E Upperகேலரிக்கு 3,500 ரூபாயும், KMK Terraceகேலரிக்கு 7,500 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சிஎஸ்கேவுக்கு பயம் காட்டிய ஆட்டோ ஓட்டுநர் மகன்! 3 முக்கிய விக்கெட்! யார் இந்த விக்னேஷ் புதூர்?
ஒருவருக்கு எத்தனை டிக்கெட் வழங்கப்படும்?
சிஎஸ்கே, ஆர்சிபி போட்டிக்கு ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிக்கெட் வாங்கியவர்கள் போட்டியை பார்க்க வரும்போது பின்வரும் நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் டிக்கெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நுழைவு வாயிலின்படி உள்ளே நுழைய வேண்டும்.
* கார் பார்க் மற்றும் டூ வீலர் பார்க்கிங் ஆகியவை உள்ளன. தொந்தரவு இல்லாத வாகன நிறுத்துமிடத்திற்கு விளையாட்டு தொடங்குவதற்கு குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்பே வர வேண்டும்.
கார் பார்க்கிங் செய்யும் இடங்கள்
a. கலைவாணர் அரங்கம்
b. வாலாஜா சாலையில் உள்ள வி பட்டாபிராமன் வாயிலுக்கு பி.டபிள்யூ.டி-ஓபோசைட்
c. மெட்ராஸ் பல்கலைக்கழக வளாகம்
ட். ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி வளாகம்.
e. ரயில்வே கார் பார்க்கிங்
f. விக்டோரியா ஹாஸ்டல்
ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
* போட்டி நடைபெறும் நாட்களில் கார், பைக்குகளை தவிர்த்து பேருந்து, மெட்ரோ உள்ளிட்ட பொது போக்குவரத்தை பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு அனுமதி இல்லை
* சேப்பாக்கம் மைதானம் பிளாஸ்டிக் இல்லாத மண்டலம் மற்றும் பிளாஸ்டிக் பைகள் அல்லது வேறு எந்த பிளாஸ்டிக் தொடர்பான பொருட்களும் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படாது.
*
சேப்பாக்கம் மைதானத்தில் சிகரெட், பீடி, குட்கா, பான் மசாலா அல்லது வேறு எந்த புகையிலை பொருட்களும் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படாது.
* சேப்பாக்கம் மைதானத்தில் தூய குடிநீர் அனைத்து நிலைகளிலும் பொதுமக்களுக்கு இலவசமாக கிடைக்கிறது.
உணவு பொருட்களுக்கு அனுமதி இல்லை
* வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுப்பொருட்களுக்கு அனுமதி இல்லை.
* நாய்கள் போன்ற செல்லப்பிராணிகளுக்கு அனுமதி கிடையாது.
* போட்டி நடைபெறும் 28ம் தேதி மாலை 5.30 மணி வரை என்ட்ரி கேட்கள் திறந்திருக்கும்.
* ஒருமுறை மைதானத்தை விட்டு வெளியே சென்றால் மீண்டும் உள்ளே வர அனுமதி கிடையாது.
* அரங்கத்தை அணுக சக்கர நாற்காலி தேவைப்படும் உடல் ரீதியாக சவாலான ரசிகர்களுக்கு சக்கர நாற்காலி வழங்கப்படும்.
* ஆன்லைன் டிக்கெட்டுகளை வாங்கும் ரசிகர்கள் மைதான வாயிலில் பார்கோடு / கியூஆர் குறியீட்டைக் கொண்டு மின் டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
'தல' தோனி தரிசனம் பார்த்த 30.5 கோடி பேர்! ரசிகர்களால் குலுங்கிய சேப்பாக்கம் மைதானம்!