'தல' தோனி தரிசனம் பார்த்த 30.5 கோடி பேர்! ரசிகர்களால் குலுங்கிய சேப்பாக்கம் மைதானம்!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டியில் தோனி களமிறங்கியபோது அதை நேரலையில் 30.5 கோடி பேர் பார்த்துள்ளனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டியில் தோனி களமிறங்கியபோது அதை நேரலையில் 30.5 கோடி பேர் பார்த்துள்ளனர்.
IPL CSK vs MI: MS Dhoni: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 155 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணியின் நூர் அகமது 4 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். கலீல் அகமது 3 விக்கெட் சாய்த்தார்.
பின்பு விளையாடிய சிஎஸ்கே 19.1 ஓவரில் 6 விக்கெட் இழந்து 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் 6 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 26 பந்தில் 53 ரன்கள் அடித்தார். ரச்சின் ரவீந்திரா 45 பந்தில் 4 சிக்சர் 2 பவுண்டரியுடன் 65 ரன்கள் அடித்து இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றி பெறச்செய்தார். மும்பை அணியில் விக்னேஷ் புத்தூர் 3 விக்கெட் வீழ்த்தினார். 4 விக்கெட் சாய்த்த சிஎஸ்கேவின் நூர் அகமது ஆட்டநாயகன் விருது வென்றார்.
இந்த போட்டியில் சென்னையின் வெற்றிக்கு தோனியும் முக்கிய காரணமாகும். அதாவது நூர் அகமது பந்தில் சூர்யகுமார் யாதவ் ஸ்டெம்பிங் முறையில் அவுட் ஆனார். மின்னல் வேகத்தில் தோனி இந்த ஸ்டெம்பிங்கை செய்தார். அதாவது வெறும் 0.12 செகண்ட்ஸில் தோனி இந்த ஸ்டெம்பிங் செய்தார். 44 வயதிலும் தோனி இப்படி மின்னல் வேகத்தில் செயல்பட்டது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சொந்த மண்ணில் மும்பையை ஓட விட்டது எப்படி? சிஎஸ்கே வெற்றிக்கு 5 முக்கிய காரணங்கள்!
மேலும் இந்த போட்டியில் தோனி எப்போது களமிறங்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். சிஎஸ்கேவின் வெற்றிக்கு 8 பந்தில் 4 ரன்கள் இருந்தபோது தோனி உள்ளே களம் புகுந்தார். அப்போது மைதானத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்கள் தோனி.., தோனி என ஆரவாரமிட்டனர். ரசிகர்களின் ஆரவாரத்தால் சென்னை சேப்பாக்கம் மைதானமே குலுங்கியது.
ஆனால் 2 பந்துகளை சந்தித்த தோனி ரன் ஏதும் எடுக்கவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தோனி மைதானத்தில் களமிறங்கியபோது ஜியோ ஹாட் ஸ்டாரில் சுமார் 30.5 கோடி பேர் அதனை நேரலையில் பார்த்தனர். இது ஒரு மிகப்பெரும் சாதனையாக கருத்தப்படுகிறது.
IPL 2025 CSK vs MI: மின்னலை மிஞ்சிய வேகம்.. தோனியின் சூப்பர் ஸ்டம்பிங்; ஷாக்கான சூர்யகுமார் யாதவ்!