சிஎஸ்கேயின் கோட்டையான சேப்பாக்கத்தில் ரன் எடுக்காமலேயே மோசமான சாதனையை படைத்த ரோகித் சர்மா!
Top 5 players who Most Ducks in IPL Cricket : ஐபிஎல் 2025-ல் ரோகித் சர்மாவுக்கு மோசமான தொடக்கம். சென்னைக்கு எதிராக டக் அவுட் ஆகி மோசமான சாதனை படைத்தார்.
Top 5 players who Most Ducks in IPL Cricket : ஐபிஎல் 2025-ல் ரோகித் சர்மாவுக்கு மோசமான தொடக்கம். சென்னைக்கு எதிராக டக் அவுட் ஆகி மோசமான சாதனை படைத்தார்.
Top 5 players who Most Ducks in the IPL Cricket : இந்தியன் பிரீமியர் லீக் 18வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு மோசமான தொடக்கமாக அமைந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட் ஆனார். இதன் மூலம் அவர் ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளார்.
ஐபிஎல்-இல் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோருடன் மோசமான சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். மும்பை ரசிகர்கள் சிக்ஸர் கிங்கை பெரிய சிக்ஸர்கள் அடிப்பதை பார்க்க ஆவலுடன் இருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை. டக் அவுட் ஆகி ரோகித் சர்மா மோசமான சாதனை படைத்தார்.
சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடந்த சிஎஸ்கே மற்றும் எம்ஐ அணிகளுக்கு இடையிலான போட்டியில், ரோகித் முதலில் பேட்டிங் செய்ய வந்தார். இந்த போட்டியில் டாஸ் வென்ற ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பேட்டிங் செய்ய MI அணியை அழைத்தார். பதிலுக்கு கலீல் அகமது முதல் ஓவரை வீசினார். முதல் மூன்று பந்துகளை டைட் லெந்தில் வீசி ரன் எடுக்க வாய்ப்பு கொடுக்கவில்லை. அதன் பிறகு ஓவரின் நான்காவது பந்தில் ஷாட் கவரில் இருந்த ஷிவம் துபேவிடம் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இதன் மூலமாக ரோகித் சர்மா மோசமான சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கிளென் மேக்ஸ்வெல் (18 டக் அவுட்), தினேஷ் கார்த்திக் (18 டக் அவுட்), பியூஷ் சாவ்லா (16 டக் அவுட்), சுனில் நரைன் (16 டக் அவுட்) ஆகியோர் டக் அவுட் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.
மும்பை இந்தியன்ஸ் டாப் 5 பேட்ஸ்மேன்கள் சொதப்பல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இந்த முதல் போட்டி மோசமாகவே இருந்தது. அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக விளையாடவில்லை. முதலில் ரோகித் சர்மா 0, அடுத்து ரயான் ரிக்ல்டன் 13, அடுத்து வில் ஜாக்ஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவும் பெரிய இன்னிங்ஸ் எதுவும் ஆடவில்லை.
அவரும் 26 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார். திலக் வர்மாவும் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். 120 ரன்கள் மட்டுமே எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசியில் தீபக் சாஹர் வந்து 28 ரன்கள் எடுத்து கொடுக்க 155 ரன்களை எட்டியது. 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. சென்னையின் பந்துவீச்சில் ஸ்பின் பந்துவீச்சாளர்கள் அசத்தினர். நூர் அகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவிச்சந்திரன் அஷ்வினும் 1 விக்கெட் எடுத்தார். கலீல் அகமது 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.