Virat Kohli Batting
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடந்து வருகிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 445 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இந்தியாவின் பெயரை கேட்டாலே அடிப்பேன் என கூறி வரும் டிராவிஸ் ஹெட் இந்த முறைம் அதிரடி சதம் (160 பந்தில் 152 ரன்) எடுத்து அவுட் ஆனார்.மறுபக்கம் ஸ்டீபன் ஸ்மித்தும் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சதம் (100 ரன்) விளாசியுள்ளார். இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
virat kohli bad form
பின்பு முதல் இன்னிங்சை ஆடி வரும் இந்திய அணி 48 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது. ஜெய்ஸ்வால் (4 ரன்), சுப்மன் கில் (1 ரன்) என ஸ்டார்க்கின் புயல் வேகப்பந்தில் அவுட் ஆனார்கள். இதேபோல் விராட் கோலி (3 ரன்) ஹேசில்வுட் வீசிய அவுட் சைட் ஆப் ஸ்டெம்ப் பந்தில் ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் 9 ரன்னில் பேட் கம்மின்ஸ் பந்தில் காலியானார்.
வேகம் நிறைந்த ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் இந்தியா வெற்றி பெற வேண்டுமானால் தான் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும் என விராட் கோலிக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் இந்த தொடர் முழுவதும் ரன் அடிக்க தடுமாறி வருகிறார் விராட் கோலி. முதல் டெஸ்ட்டின் 2வது இன்னிங்சில் மட்டும் கோலி சதம் அடித்தார். அதுவும் கோலி களமிறங்கிய நேரம் பந்து மிகவும் பழசாகி பேட்டுக்கு ஏதுவாக வந்தது. இதனால் அவர் எளிதில் சதம் அடித்து விட்டார்.
குரங்கு இனத்துடன் பும்ராவை ஒப்பிட்டு பேசிய முன்னாள் வீராங்கனை; வறுத்தெடுக்கும் இந்திய ரசிகர்கள்!
India vs Australia Test Series
ஆனால் இந்த தொடரில் நியூ பால் வீசும்போதும், பேட்டிங்கிக்கு கடினமாக இருக்கும் முதல் ஒரு மணி நேரத்திலும் விராட் கோலி சுத்தமாக ரன் அடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேறியுள்ளார். அதுவும் அவுட் சைட் ஆப் ஸ்டெம்ப்பில் பந்தை வீசினால் கோலி அவுட்டாகி விடுவார் என்பது கிரிக்கெட் பார்க்கும் சிறுவர்களுக்கே தெரியும்போது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தெரியாதா என்ன!
ஆஸ்திரேலியா பாஸ்ட் பவுலர்கள் மட்டுமில்ல; எந்த நாட்டு பவுலர்களாக இருந்தாலும் சரி கோலிக்கு எதிராக பயன்படுத்தும் ஒரே ஆயுதம் அவுட் சைட் ஆப் ஸ்டெம்ப்பில் பந்து. ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக பேட்ஸ்மேனுக்கு தொந்தரவு கொடுக்காமல் ஸ்டெம்புக்கு வெளியே செல்லும் பந்தை தேவையில்லாமல் ஷாட் ஆட முயற்சித்து எளிதில் விக்கெட்டை தாரை வார்த்து விடுகிறார் விராட் கோலி.
India vs Australia 3rd Test
டெஸ்ட் கிரிக்கெடில் எக்கச்சக்க நேரம் உள்ளது. 150 பந்தில் அரை சதமும், 300 பந்தில் சதமும் அடித்தாலும் யாரும் ஒன்றும் சொல்லப்போவது இல்லை. வெளியே செல்லும் பந்துகளை விட்டு, ஸ்டெம்ப் நோக்கி வரும் பந்துகளை அடித்தாலே ரன்கள் எளிதாக வந்து விடும். ஆனால் கோலி கொஞ்சம் கூட பொறுமையின்றி தேவையில்லாமல் பந்தை அடிக்கச் சென்று விக்கெட்டை எதிரணிக்கு இலசமாக கொடுத்து விடுகிறார் என்று முன்னாள் வீரர்கள் பலர் குற்றம்சாட்டுகின்றனர்.
எத்தனை முறை பட்டாலும் திருந்தாத விராட் கோலி இனிமேலாவது திருந்த வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
முதல் ஓவரிலேயே தடுமாறும் இந்தியா: 445 என்ற வலுவான நிலையில் ஆஸி. மேட்ச் யார் பக்கம்?