குரங்கு இனத்துடன் பும்ராவை ஒப்பிட்டு பேசிய முன்னாள் வீராங்கனை; வறுத்தெடுக்கும் இந்திய ரசிகர்கள்!

First Published | Dec 16, 2024, 8:56 AM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டின்போது இங்கிலாந்து முன்னாள் வீராங்கனை ஈஷா குகா குரங்கு இனத்துடன் பும்ராவை ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Jasprit Bumrah and Isa Guha

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 445 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து இந்தியாவுக்கு தலைவலியாக இருந்து வரும் டிராவிஸ் ஹெட் அதிரடி சதம் (160 பந்தில் 152 ரன்) எடுத்து அவுட் ஆனார்.

மறுபக்கம் ஸ்டீபன் ஸ்மித்தும் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சதம் (100 ரன்) விளாசியுள்ளார். இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். பின்பு முதல் இன்னிங்சை ஆடி வரும் இந்திய அணி 22 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது. இது ஒருபக்கம் இருக்க, இந்த போட்டியில் இங்கிலாந்து முன்னாள் பெண் வீராங்கனை ஈஷா குகா பும்ராவை குரங்கு இனத்துடன் ஒப்பிட்டு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Jasprit Bumrah Bowling

அதாவது ஒரு டிவிக்காக பிரட்லீயும், ஈஷா குகாவும் கமெண்ட்டரி செய்து கொண்டிருந்தனர். அப்போது பிரட்லீ பும்ராவை மிகவும் சிறப்பாக விளையாடி வருவதை குறிக்கும் வகையில் Most valuable player என்று பாரட்டினார். இதனைத் தொடர்ந்து ஈஷா குகாவும் பும்ராவை பாராட்டுவாதாக நினைத்து most valuable Primate (மிகவும் மதிப்புமிக்க பிரைமேட்) என்று தெரிவித்தார்.

முதல் ஓவரிலேயே தடுமாறும் இந்தியா: 445 என்ற வலுவான நிலையில் ஆஸி. மேட்ச் யார் பக்கம்?

Tap to resize

India vs Australia Test Series

பொதுவாக குரங்கு போன்ற பெரிய வகை பாலூட்டி விலங்குகளை பிரைமேட் என்று அழைப்பார்கள். ஆகையால் ஈஷா குகா பிரைமேட் என அழைத்து இருப்பதற்கு எதிர்புகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக உலகமெங்கும் உள்ள இந்திய ரசிகர்கள் ஈஷா குகாவை கடுமையாக வசைபாடி வருகின்றனர். ''ஒரு வீரரை பாராட்ட எத்தனையோ நல்ல வார்த்தைகள் உள்ளன. ஆனால் ஈஷா குகா வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்'' என்று கூறியுள்ளனர்.

India vs Australia 3rd Test

இன்னும் சில இந்திய ரசிகர்கள், ''வெளிநாட்டு மண்ணில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடுவதை பொறுக்க முடியாமல் வெளிநாட்டு முன்னாள் வீரர்கள் நமது வீரர்களை விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆகவே ஈஷா குகா தான் பயன்படுத்திய வார்த்தையை திரும்ப பெற வேண்டும். அவர் கமெண்ட்டரி செய்வதை தடை விதிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.

கடந்த 2007 2008ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தபோது ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கை 'குரங்கு' என தெரிவித்தார். இப்போது அதே போன்று ஈஷா குகா பும்ரா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் ஐபிஎல்; ரூ.1.60 கோடிக்கு ஏலம் போன 16 வயது தமிழக வீராங்கனை; யார் இந்த கமலினி?

Latest Videos

click me!