பெண்கள் ஐபிஎல்; ரூ.1.60 கோடிக்கு ஏலம் போன 16 வயது தமிழக வீராங்கனை; யார் இந்த கமலினி?

First Published | Dec 15, 2024, 6:26 PM IST


பெண்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான நடத்தப்பட்ட ஏலத்தில் தமிழக வீராங்கனை ஜி கமலினி ரூ.1.60 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

G Kamalini

இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் உலகின் பணக்கார விளையாட்டு தொடர்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அண்மையில் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.700 கோடிக்கு மேல் 182 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

இதேபோல் வீராங்கனைகளுக்கு Women's Premier Leagueஎன்ற பெயரில் ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது. பெண்கள் ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயண்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ், உபி வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 5 அணிகள் உள்ளன. இந்நிலையில்,  Women's Premier League தொடருக்கான மினி ஏலம் இன்று பெங்களூருவில் நடைபெற்றது. 
 

WPL 2025

மொத்தம் 120 வீராங்கனைகள் ஏலத்தில் பதிவு செய்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த 16 வயதான ஜி கமலினி1.60 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அதிகபட்சமாக இந்தியாவின் சிம்ரன் ஷேக் ரூ.1.90 கோடிக்கு குஜராத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை டியான்ட்ரா டாட்டின் ரூ.1.70 கோடிக்கு குஜாரத் அணி வாங்கியுள்ளது. 

என்னப்பா இப்படி முட்டாள்தனமா பந்து வீசுறீங்க? சிராஜை நேரலையில் விமர்சித்த முன்னாள் வீரர்

Tap to resize

Women Premier League

இதன்பிறகு அதிகப்பட்ச தொகையாக தமிழ்நாட்டின் ஜி கமலினியை ரூ.1.60 கோடிக்கு மும்பை அணி வாங்கியுள்ளது. இது அடிப்படை விலை ரூ.10 லட்சம் தான். ஆனால் ஜி  கமலினி அதிரடிக்கு பெயர் போனவர் என்பதால் இவரை எடுக்க குஜாரத், மும்பை அணிகள் போட்டி போட்டன. இறுதியில் ரூ.1.60 கோடிக்கு குஜராத் அணி இவரை தட்டித்தூக்கியுள்ளது.

16 வயதான ஜி  கமலினி அதிரடிக்கு பெயர் போனவர். அண்மையில் நடந்த 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான டி20 போட்டி தொடரில் 8 போட்டிகளில் 311 ரன்கள் குவித்து அனைவைரின் கவனத்தையும் ஈர்த்தார். பெரிய சிக்சர்கள் அடிப்பதில் வல்லவரான இவர் இந்த தொடரில் 10 சிக்சர்கள் நொறுக்கினார்.

G Kamalini Batting

இதேபோல் 19 வயதுக்குட்பட்டோருக்கான முத்தரப்பு தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா பி அணி சார்பில் 79 ரன்களை குவித்து அசத்தினார். பாகிஸ்தானுக்கு எதிராக 29 பந்துகளில் 44 ரன்கள் விளாசினார். ஜி கமலினியின் ஹிட் திறனுக்காக அவரை மும்பை இந்தியன்ஸ் அணி போட்டி போட்டு எடுத்துள்ளது. ஜி கமலினி சுழற்பந்தும் வீசுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

'குகேஷ்க்கு ரூ.5 கோடி; மாரியப்பனுக்கு ஏதும் செய்யாமல் பாரபட்சம் காட்டினாரா மு.க.ஸ்டாலின்? உண்மை என்ன?

Latest Videos

click me!