ஒலிம்பிக்கில் இரட்டைப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநரான ஹைதராபாத்தைச் சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படத்தை சிந்து சனிக்கிழமையன்று தனது சமூக வலைதளம் வாயிலாக பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வெளிவந்த புகைப்படத்தில், சிந்துவும் வெங்கடாவும் தங்கள் கைகளில் மோதிரத்தை வைத்திருப்பதையும் ஒன்றாக சிரிப்பதையும் காணலாம். இந்த ஜோடி டிசம்பர் 22 ஆம் தேதி உதய்பூரில் திருமணம் செய்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.