'குறுக்க இந்த கௌசிக் வந்தா'; 3வது டெஸ்ட் மழையால் பாதிப்பு; WTC பைனலுக்கு இந்தியாவுக்கு சாதகமா?

Published : Dec 14, 2024, 11:13 AM IST

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில், மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

PREV
14
'குறுக்க இந்த கௌசிக் வந்தா'; 3வது டெஸ்ட் மழையால் பாதிப்பு; WTC பைனலுக்கு இந்தியாவுக்கு சாதகமா?
India vs Australia 3rd Test

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்து விட்டன. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இமாலய வெற்றி பெற்றது.  அதே வேளையில் 2வது பிங் பால் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. 

24
Rain stops India vs Australia Test

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தார். இதனால் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜாவும், நாதன் மெக்ஸ்வீனியும் களமிறங்கினார்கள்.

இருவரும் தொடக்கம் முதலே மிகவும் நிதானமாக விளையாடினார்கள். பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப் என இந்திய பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தும் அதை திறம்பட சமாளித்தனர். ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்திருந்தபோது மழை கொட்டியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. 

பஞ்சாயத்து ஓவர்: “பாக்.ல் சாம்பியன்ஸ் டிராபி" இந்தியா, பாகிஸ்தானின் கோரிக்கைகள் ஏற்பு

 

34
Australia Team

உஸ்மான் கவாஜா 3 பவுண்டரிகளுடன் 19 ரன்களும், நாதன் மெக்ஸ்வீனி 4 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். மழை காரணமாக மைதானத்தின் அவுட் பீல்ட்டில் தண்ணீர் தேங்கியுள்ளது. முதலில் பெரிய மழை பெய்த நிலையில், பின்பு சிறு தூறல் பொழுந்து வருவதால் ஆட்டத்தை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் நிலவுகிறது.

இந்திய அணி இந்த தொடரில் முன்னிலை பெற 3வது டெஸ்ட்டில் வெற்றி பெற வேண்டும். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்ல 3 டெஸ்ட் போட்டிகளில் வெல்ல வேண்டும். 

44
Indian Team

இல்லாவிடில் ஒன்றை டிரா செய்து விட்டு, மற்ற இரண்டிலும் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும். ஆகையால் காபா டெஸ்ட்டில் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் நிலையில், மழை குறுக்கே வந்து ஆட்டத்தை தடை செய்துள்ளது இந்திய அணிக்கு பாதகமாக உள்ளது.

3வது டெஸ்ட் போட்டி நடக்கும் பிரிஸ்பேனில் இன்று மட்டுமின்றி அடுத்த 3 நாட்களும் மழை பெய்ய வாய்ப்புள்ளது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், இந்த இந்த போட்டி முழுமையாக நடைபெறுமா? என்பது கேள்விக்குறிதான்.

உலக செஸ் சாம்பியனுக்காக மல்லுகட்டும் தமிழகம் Vs ஆந்திரா: யார் இந்த குகேஸ்?

 

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories