இந்தியா-ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டி தொடங்கும் நேரம்? எந்த சேனலில் பார்க்கலாம்? என்ற விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிந்து விட்டது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இமாலய வெற்றி பெற்றது. அதே வேளையில் 2வது பிங் பால் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பெரும் தோல்வியை தழுவியது.
24
India vs Australia 3rd Test
இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நாளை தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை தக்க வைக்க இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். முதல் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் படுமோசமாக பேட்டிங் செய்ததே தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
காபா பிட்ச் வேகமும், பவுன்ஸ்சும் நிறைந்தது. ஆனாலும் பிட்ச் பவுலர்கள், பேட்ஸ்மேன்கள் என இருவருக்கும் சாதகமாக தயார் செய்யப்பட்டுள்ளதாக பிட்ச் வடிவமைப்பாளர் கூறியுள்ளார். ஆகையால் இந்திய வீரர்கள் ஒவ்வொரு நாளின் முதல் செஷனிலும் விக்கெட் இழக்காமல் கவனமுடன் பேட்டிங் செய்தால் அதிக ரன்கள் குவிக்கலாம். பவுலிங்கை பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ரா மிகச்சிறப்பாக பந்துவீசி வருகிறார். முகமது சிராஜும் ஓரளவு நன்றாக பந்துவீசி வருகிறார்.
ஆனால் கடந்த டெஸ்ட் போட்டியில் 3வது பவுலரான ஹர்சித் ராணாவும், 4வது பவுலரான ரவிச்சந்திரன் அஸ்வினும் சரியாக பந்துவீசவில்லை. ஆகவே இந்த போட்டியில் இவர்கள் இருவருக்கு பதிலாக ஆகாஷ் தீப், ரவீந்திர ஜடேஜா அல்லது வாஷிங்டன் சுந்தர் களமிறங்க வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
44
India vs Australia 3rd Test: where to watch?
காயம் காரணமாக கடந்த டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஜோஸ் ஹேசில்வுட் போலண்ட்டுக்கு பதிலாக மீண்டும் அணிக்கு திரும்புகிறார். இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 5.50 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும சேனல்களில் இந்த போட்டியை நேரலையாக காணலாம். ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் தமிழ் வர்ணனையுடன் போட்டியை காணலாம். மேலும் மொபைலில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திலும் போட்டியை கண்டு ரசிக்கலாம்.