India vs Australia Test series
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்து விட்டன. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இமாலய வெற்றி பெற்றது. அதே வேளையில் 2வது பிங் பால் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், இடையில் புகுந்த மழை ஆட்டத்தை தடை செய்தது. மழை காரணமாக முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்து இருந்தது.
Travis Head Batting
உஸ்மான் கவாஜா 19 ரன்களும், நாதன் மெக்ஸ்வீனி 4 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இன்று 2வது நாள் முன்கூட்டியே தொடங்கிய நிலையில், தொடக்க வீரர்களை பும்ரா விரைவில் வெளியேற்றினார். கவாஜா (21 ரன்),மெக்ஸ்வீனி (9 ரன்) அடுத்தடுத்து அவுட்டானார்கள். பின்பு களமிறங்கி சிறிது நேரம் தாக்குப்பிடித்த மார்னஸ் லாபுசேன் (12) நிதிஷ்குமார் ரெட்டி பந்தில் வெளியேறினார்.
இதனால் ஆஸ்திரேலியா அணி 75 3 என பரிதவித்தது. ஆனால் அதன்பிறகு களம் கண்ட டிராவிஸ் ஹெட்டும், ஸ்டீபன் ஸ்மித்தும் இந்திய பவுலர்களை எளிதாக சமாளித்து ரன்கள் சேர்த்தனர். இந்தியாவுக்கு தலைவலியாக விளங்கும் டிராவிஸ் ஹெட் வழக்கம்போல் பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார். மறுபக்கம் ஸ்மித் நிதானம் காட்டினார்.
'குகேஷ்க்கு ரூ.5 கோடி; மாரியப்பனுக்கு ஏதும் செய்யாமல் பாரபட்சம் காட்டினாரா மு.க.ஸ்டாலின்? உண்மை என்ன?
Steven Smith Batting
பும்ரா இவர்கள் இருவருக்கும் டாட் பால்கள் வீசி நெருக்கடி கொடுத்தாலும், மற்ற பவுலர்கள் சிறப்பாக பந்துவீசாததால் ரன்கள் விரைவாக சென்றன. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஹெட் 110 பந்துகளில் சதம் விளாசினார். இது அவரது 8வது சதமாகும். அதனைத் தொடர்ந்து, மோசமான பார்மில் சிக்கித்தவித்த ஸ்மித்தும் தனது 32 சதத்தை விளாசினார்.
ஸ்கோர் 316 ஆக உயர்ந்தபோது இந்த ஜோடியை பும்ரா பிரித்தார். நன்றாக விளையாடிய ஸ்மித் 12 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் ரோகித்திடம் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய மிட்ச்செல் மார்சும் (5 ரன்) பும்ராவின் சூப்பர் பந்துசீச்சில் காலியானர். உடனே, அதிரடி சதம் விளாசிய ஹெட்டும் (160 பந்தில் 152 ரன்கள்) பும்ராவின் பந்தில் இரையானார். ஹெட் மொத்தம் 18 பவுண்டரிகளை விளாசினார்.
Team India
பின்பு சிறிது நேரம் தாக்குப்பிடித்த கேப்டன் பேட் கம்மின்ஸ் (20 ரன்) சிராஜ் பந்தில் விக்கெட் இழந்தார். 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழந்து 405 ரன்கள் எடுத்துள்ளது. மிட்ச்செல் ஸ்டார்க் (7 ரன்), அலெக்ஸ் கேரி (45 ரன்) எடுத்து களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
ஆஸ்திரேலியா 3 விக்கெடுக்கு 300 ரன்கள் எடுத்து வலுவாக இருந்த நிலையில், பும்ரா அடுத்தடுத்து விக்கெட் வீழ்த்தி இந்தியாவுக்கு கம்பேக் கொடுத்துள்ளார். பும்ராவை தவிர மற்ற வீரர்கள் யாரும் சிறப்பாக பந்துவீசாதது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாகும்.
ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்ற நாயகி PV சிந்துவுக்கு விரைவில் டும் டும் டும்