வெறும் போட்டோ மட்டும் தான்: ஒலிம்பிக்கில் பி.டி.உஷா என்னை ஆதரிப்பது போல் நடித்தார் - வினேஷ் போகத்

First Published | Sep 11, 2024, 4:09 PM IST

ஒலிம்பிக்கில் நான் தகுதி நீக்கம் செய்யப்பட்ட போது இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா என்னை ஆதரிப்பது போல் நடித்தாரே தவிற எனக்கு எந்த ஆதரவையும் வழங்கவில்லை என வினேஷ் போகத் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Vinesh Phogat

அண்மையில் பாரீசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தப் போட்டியின் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஆனால், போட்டி நடைபெறும் நாளில் அவரது எடை சரிபார்க்கப்பட்டபோது 50 கிலோவுக்கு கூடுதலாக 100 கிராம் இருந்ததால் அவர் ஒலிம்பிக் விதிமுறைப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனம் உடைந்த அவர் மல்யுத்த போட்டிகளில் இருந்தே விலகுவதாக அறிவித்தார்.

இருப்பினும் வினேஷ் போகத்தின் முயற்சியை பாராட்டும் விதமாக அவருக்கு வெள்ளிப் பதக்கம் வென்ற வீரருக்கு வழங்கப்படும் கௌரவம் மற்றும் வெகுமதி வழங்கப்படும் என்று அரியானா மாநில அரசு அறிவித்தது. 

Tap to resize

இந்நிலையில் மல்யுத்த போட்டிகளில் இருந்து விடை பெற்ற கையோடு ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக சேர்ந்தார். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. 

இதனிடையே உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு வினேஷ் போகத் அளித்த பேட்டியில், பாரிஸ் நகரில் எனக்கு என்ன ஆதரவு கிடைத்தது என தெரியவில்லை. பி.டி.உஷா என்னை சந்தித்து எனது அனுமதி இல்லாமலேயே என்னுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை எடுத்துக் கொண்டார். இது உலக அரங்கில் எனக்கு அவர் ஆதரவு அளிப்பது போன்ற மாயையை ஏற்படுத்தியது. 

அரசியலில் பூட்டிய கதவுககுள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அப்படி தான் பாலீசிலும் அரசியல் நடைபெற்றது. இதனால் என் மனம் உடைந்தது. நான் மருத்துவமனையில் இருந்தபோது வெளியில் என்ன நடந்தது என தெரியவில்லை. வாழ்க்கையில் கடினமான கட்டத்தைக் கடந்து கொண்டு இருந்தேன். நான் உங்களுடன் இருக்கிறேன் என்று பி.டி.உஷா கூறினார். ஆனால் அது வெறும் நடிப்பு சரியான நடவடிக்கை இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!