எம்.எஸ்.தோனி ஓய்வு – ரிஷப் பண்ட் வருகை – ருதுராஜ் கேப்டனாக தக்க வைக்க வாய்ப்பு – சிஎஸ்கேயின் புதிய மாற்றம்!

Published : Sep 11, 2024, 01:47 PM ISTUpdated : Sep 11, 2024, 02:54 PM IST

ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ்.தோனி தொடர்வாரா? ஓய்வு பெற்றால் அவருக்கு பதிலாக யார் விளையாடுவார்? கேப்டன் யார்? என்பது குறித்த ஒரு பார்வை.

PREV
16
எம்.எஸ்.தோனி ஓய்வு – ரிஷப் பண்ட் வருகை – ருதுராஜ் கேப்டனாக தக்க வைக்க வாய்ப்பு – சிஎஸ்கேயின் புதிய மாற்றம்!
Chennai Super Kings, IPL 2025

ஐபிஎல் 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக மெகா ஏலம் நடைபெற உள்ளது. ஐபிஎல் 2025 தொடருக்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. ஒவ்வொரு அணியும் தங்களை பலப்படுத்திக் கொள்ள யாரை தக்க வைத்துக் கொள்ளலாம், யாரை விடுவிக்கலாம் என்ற தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளன.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது 2024ல் நடைபெற்ற சம்பவத்தை மறந்து மீண்டும் கேப்டன் கேஎல் ராகுலை அணியிலேயே தக்க வைத்துக் கொண்டதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி அணியின் ஆலோசகராக இந்திய அணியின் ஜாம்பவான் பவுலர் ஜாகீர் கான் இடம் பெற்றுள்ளார். மேலும், ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரை அந்தந்த அணிகள் விடுவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

26
Chennai Super Kings, IPL 2025

இந்த நிலையில் தான் எல்லா கண்களும் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் பக்கம் திரும்பியிருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால் ஒரே ஒரு மன்னன் எம்.எஸ்.தோனி மட்டுமே. ஐபிஎல் 2025க்கு முன்னதாக சிஎஸ்கேயில் என்ன மாற்றம் நிகழும், தோனி விளையாடுவாரா? ஓய்வு குறித்து அறிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தோனி ஓய்வு அறிவித்தால் அவருக்குப் பதிலாக புதிய விக்கெட் கீப்பராக சிஎஸ்கேயில் இடம் பெறும் வீரர் யார் என்று அடுக்கடுக்கான கேள்விகள் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

36
MS Dhoni Retirement, IPL 2025

2024 ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே விளையாடிய 14 போட்டிகளில் 7ல் வெற்றியும், 7ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்தது. இந்த நிலையில் தான் 2025 சீசனில் சிஎஸ்கேயில் என்னென்ன மாற்றங்கள் நிகழலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க…

தோனி ஓய்வு பெறுவது என்பது நிச்சயம் ஒருநாள் சாத்தியம். ஆனால், தோனி அன்கேப்டு பிளேயராக அணியில் தக்க வைத்துக் கொள்ள அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. எப்படியும் ஒரு நாள் தனது ஓய்வு முடிவு அறிவிப்பார். அப்படி அறிவிக்கும் போது சிஎஸ்கே அணிக்கு கண்டிப்பாக ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவைப்படும்.

46
Ruturaj Gaikwad as Captain

தோனிக்கு நிகராக சிஎஸ்கே தேர்வு செய்யும் ஒரு மாற்று வீரர் வேறு யாருமில்லை. அவர் தான் ரிஷப் பண்ட். டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பண்டை விடுவித்தால், சிஎஸ்கே அவரை ஏலத்தில் எடுத்துக் கொள்ளும். ஆனால், அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங் வெளியேறியதைத் தொடர்ந்து ரிஷப் பண்ட் அணியிலிருந்து விடுவிக்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.

56
CSK Retained and Released Players List

ஏனென்றால், டெல்லி அணியில் ரிக்கி அண்ட் ரிஷப் இருவரும் நெருங்கிய நண்பர்கள் போன்று வலம் வந்தனர். தோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட் சிஎஸ்கே அணியால் ஏலம் எடுக்கப்பட்டால் கேப்டன் பதவியில் மாற்றம் செய்ய சிஎஸ்கே யோசிக்கலாம். ஐபிஎல் 2024 சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார், ஆனால் வரலாற்றில் மூன்றாவது முறையாக பிளே ஆஃப்களுக்குச் செல்லத் தவறியதால் அவரால் எதிர்பார்த்த அளவுக்குச் செயல்பட முடியவில்லை.

66
Rishabh Pant, Delhi Capitals, IPL 2025

ரிஷப் பண்டை சிஎஸ்கே ஏலத்தில் வாங்கினால், பண்ட் கேப்டன் பொறுப்பைத் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டார். ஏனென்றால் டெல்லி அணியில் கேப்டனாகவே வலம் வந்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 32 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட், 16 போட்டிகளில் வெற்றியும், 15 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளார். ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories