Jasprit Bumrah
ஜஸ்ப்ரித் பும்ராவும் அல்ல, கேஎல் ராகுலும் அல்ல, இந்திய அணியின் எதிர்கால கேப்டன்கள் இவர்கள் தான் என்று ஐபிஎல் கேப்டன்கள் இருவரது பெயரை குறிப்பிட்டு கூறியிருக்கிறார் தினேஷ் கார்த்திக். அவர்கள் யார்? ஏன் அவ்வாறு கூறியிருக்கிறார் என்று மேற்கொண்டு பார்க்கலாம் வாங்க…
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு பிறகு அனைத்து வடிவங்களிலும் சிறந்த கேப்டன்களை தேர்ந்தெடுக்கும் போது சமீபத்திய ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டு அணியை வழிநடத்திய ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் கேஎல் ராகுல் இருவரையும் நீக்கிவிட்டு அவர்களுக்கு பிறகு இளம் ஐபிஎல் கேப்டன்களின் பெயரை முன்னாள் இந்திய அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.
Jasprit Bumrah and KL Rahul
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்ற பிறகு சூர்யகுமார் யாதவ் டி20 கேப்டனாக இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாடினாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக ரோகித் சர்மா தான் இருக்கிறார்.
2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணிக்கு ரோகித் சர்மா தான் தலைமை தாங்குவார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது 37 வயதாகு ரோகித் சர்மா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இறுதி கட்டத்தில் பயணித்து கொண்டிருக்கிறார்.
எம்.எஸ்.தோனிக்கு பதிலாக விராட் கோலி மற்றும் விராட் கோலிக்கு பிறகு தற்போது ரோகித் சர்மா என்று இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு ஒருவர் மாற்றி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
Suryakumar Yadav
இந்த நிலையில் தான் இந்திய அணியின் எதிர்கால கேப்டன்களாக ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில்லை தேர்வு செய்திருக்கிறார். ஏற்கனவே இருவரும் தலா 5 டி20 போட்டிகளில் இந்திய அணியை வழி நடத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு கேப்டனாகவும் இருந்து வருகின்றனர்.
இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தக் கூடியவர்களாக இவர்கள் இருவரும் நேரடியாக எனது மனதில் வருகிறார்கள். ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் இருவரும் ஐபிஎல் அணிகளின் கேப்டனாகவும் இருந்துள்ளனர். இதே போன்று இந்திய அணிக்கும் கேப்டனாகவும் இருந்துள்ளனர். சரியான நேரத்தில் இவர்கள் இருவரும் இந்திய அணியின் ஆல் ஃபார்மேட் கேப்டனாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.
Rohit Sharma - Virat Kohli
டி20 உலகக் கோப்பைக்கு பிறகு இலங்கை சென்ற இந்திய அணியானது 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில், டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு சுப்மன் கில் தான் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். தற்போது நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியான, துலீப் டிராபியில் இந்தியா ஏ அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
Dinesh Karthik-Rohit Sharma
துலீப் டிராபியில் இடம் பெற்ற 4 கேப்டன்களில் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்படவில்லை. 2022 ஆம் ஆண்டு கார் விபத்திற்கு முன் இந்திய அணியின் கேப்டனுக்கான பட்டியலில் இடம் பெற்றிருந்தார். கார் விபத்திலிருந்து மீண்டு வந்து தற்போது விளையாடி வரும் ரிஷப் பண்ட்டிற்கு துணை கேப்டன் அல்லது கேப்டனுக்கான வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.