முதுகு வலியால் போராடிய MS Dhoni: வின்னிங் ஷாட் சிக்ஸர் அடிக்க, 28 ஆண்டுகளுக்கு பிறகு கையில் கிடைத்த World Cup!

First Published | Sep 10, 2024, 5:30 PM IST

2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கேப்டன் எம்.எஸ்.தோனி முதுகு வலியால் அவதிப்பட்டாலும், இந்திய அணிக்கு 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பை டிராபியை வென்று கொடுத்தார். தோனி மற்றும் காம்பீர் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது.

MS Dhoni, 2011 ODI World Cup

இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது கேப்டன் எம்.எஸ்.தோனி முதுகு வலியால் அவதிப்பட்டாலும் கூட அதையெல்லாம் பொருட்படுத்தாமல் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு உலகக் கோப்பை டிராபியை வென்று கொடுத்துள்ளார்.

உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்பது ஒவ்வொருவரது கனவு. அந்த கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடும். அப்படி போராடி 1983 ஆம் ஆண்டு  இந்திய அணிக்கு முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று கொடுத்து சாதனை படைத்தவர் கபில் தேவ்.

2011 ODI World Cup

1983 ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணியானது கிளைவ் லாயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று புதிய சரித்திரம் படைத்தது.

அதன் பிறகு 28 ஆண்டுகள் உலகக் கோப்பைக்காக இந்திய அணி போராடியது. ஆனால், பலனில்லை. கடைசியாக 28 ஆண்டுகளுக்கு பிறகு தோனி தலைமையிலான இந்திய அணி டிராபியை வென்று கொடுத்து புதிய சாதனை படைத்தது.

Tap to resize

ODI World Cup 2011

இந்திய அணியின் கோட்டையான மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி, குமார் சங்கக்காரா தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய இலங்கை மஹேலா ஜெயவர்தனேயின் அதிரடியால் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் குவித்தது.

MS Dhoni, IND vs SL, ODI World Cup 2011 Final

பின்னர் 275 ரன்கள் எடுத்தால் டிராபி என்ற இமாலய இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. இதி கவுதம் காம்பீர் மற்றும் எம்.எஸ்.தோனி இருவரும் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தனர்.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் தோனியின் வின்னிங் ஷாட் சிக்ஸர் தான் இன்றும் பேசப்பட்டு வருகிறது. காம்பீர் 97 ரன்களில் ஆட்டமிழக்க தோனி மற்றும் யுவராஜ் சிங் ஜோடி இந்திய அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தது. அதோடு, 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு டிராபியை வென்று கொடுத்தது.

2011 Cricket World Cup

போட்டியின் 49ஆவது ஓவரை குலசேகரா வீசினார். அந்த ஓவரில் தோனி ஒரு அற்புதமான சிக்ஸரை பறக்க விட இந்திய அணி 2ஆவது முறையாக டிராபியை தட்டி தூக்கியது. அந்த அற்புதமான மறக்க முடியாத நாளிலிருந்து ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை மீண்டும் இந்திய அணியால் கைப்பற்ற முடியவில்லை.

மும்பையில் நடந்த அந்த மறக்க முடியாத மாலையில் இருந்து, ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியாவால் மீண்டும் கைப்பற்ற முடியவில்லை. 2015 மற்றும் 2019ல் அரையிறுதிப் போட்டிக்கு வந்தாலும், 2023ல் இறுதிப் போட்டி வரை வந்தாலும் 3ஆவது முறையாக டிராபியை வெல்ல வாய்ப்பு கிட்டவில்லை. இது 2011 ஆம் ஆண்டு தோனியின் சாதனையின் முக்கியத்துவத்தை மேலும் மேம்படுத்தி காட்டுகிறது.

2011 World Cup, IND vs SL Final

கிரிக்கெட் வரலாற்றில் 3 ஐசிசி டிராபிகளை வென்று கொடுத்த கேப்டனாக தோனி தனித்து நிற்கிறார். 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஷிப் டிராபியை இந்திய அணிக்காக வென்று கொடுத்தார்.

Latest Videos

click me!