ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனியின் எதிர்காலம் குறித்த சந்தேகங்கள் நிலவும் நிலையில், அவர் 2025 ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அணியின் சமீபத்திய செயல்பாடுகள் மற்றும் வீரர்கள் தேர்வு தோனியின் எதிர்காலம் குறித்த அனுமானங்களுக்கு வழிவகுத்துள்ளன.
எம்.எஸ்.தோனி தனது ஐபிஎல் எதிர்காலம் குறித்து இன்னும் அமைதி காத்து வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெறக் கூடாது என்பது ஒட்டுமொத்த ரசிகர்களின் எண்ணம். ஆனால், வயது, உடல் தகுதி மற்றும் காயம் காரணமாக தோனி எப்போது வேண்டுமானாலும் தனது முடிவு குறித்து அறிவிப்பார் என்று தகவல் வெளியாகி வருகிறது.
27
MS Dhoni, CSK, IPL 2025
கடந்த 2023 ஆம் ஆண்டு தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்து அவரிடம் கேட்ட போது யார் சொன்னது, நீங்களே முடிவு பண்ணிட்டீங்களா என்பது போன்று கிரிக்கெட் வர்ணனையாளரிடம் கூறினார். ஆனால், அவர் 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இடம் பெற்று விளையாடினார். ஆனால், கேப்டன் பொறுப்பு ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கொடுக்கப்பட்டது.
37
MS Dhoni - Wicket Keeper
இந்த தொடரில் சிஎஸ்கே விளையாடிய 14 போட்டிகளில் 7ல் வெற்றியும், 7ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடம் பிடித்து கடைசி நேரத்தில் வெளியேறியது. ஆனால், இந்த தொடருக்கு முன்னதாக நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் தெலுங்கானாவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ஆரவெல்லி அவனிஷ் அடிப்படை தொகையான ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
ஆனால், அவருக்கு கடைசி வரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் பெஞ்சில் மட்டுமே அமர வைக்கப்பட்டிருந்தார். எனினும் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது.
இந்த ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே தக்க வைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிடும். அப்போது தான் தோனி அணியில் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து தெரியவரும்.
47
MS Dhoni - IPL Retirement
ஐபிஎல் 2025 தொடருக்கு முன்னதாக எம்.எஸ்.தோனி சிஎஸ்கேயிலிருந்து வெளியேறினாலும் சரி, ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் சரி அவருக்கு பதிலாக சிஎஸ்கே கேப்டு வீரர்களை விக்கெட் கீப்பராக அணியில் சேர்க்கும். அப்படி ஐபிஎல் 2025 ஏலத்தில் சிஎஸ்கே எடுக்க கூடிய அந்த கேப்டு வீரர்கள் யார் யார் என்று பார்க்கலாம் வாங்க…
57
Rishabh Pant
ரிஷப் பண்ட்:
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு மெகா ஏலத்தின் ஒரு பகுதியாக ரிஷப் பண்ட் இருந்தால், சிஎஸ்கே வாங்கக் கூடிய விக்கெட் கீப்பர்களில் ஒருவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் ஐபிஎல் கிரிக்கெட்டிலும் பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார். 2008 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய தோனியைப் போன்று ரிஷப் பண்டும் சிஎஸ்கேயில் இடம் பெற்றால் பல சாதனைகளை படைக்க முடியும்.
இதெல்லாம் டெல்லி கேபிடல்ஸ் அவரை விடுவித்தால் மட்டுமே நடக்கும். மேலும், அவர் ஏலத்தில் பங்கேற்று சிஎஸ்கே அவரை ஏலத்தில் எடுத்தால் மட்டுமே தோனிக்குப் பதிலாக ரிஷப் பண்ட் சிஎஸ்கேயின் விக்கெட் கீப்பராக இடம் பெற முடியும்.
67
Ishan Kishan - Mumbai Indians, IPL 2025
இஷான் கிஷன்:
கடந்த காலங்களில் இஷான் கிஷனை சிஎஸ்கே ஏலம் எடுத்தது. தற்போது மீண்டும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷனை ஏலத்தில் எடுக்கவே சிஎஸ்கே விரும்புகிறது. உள்ளூர் கிரிக்கெட்டில் ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடி வரும் இஷான் கிஷன், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தோனிக்கு பதிலாகவே நியமிக்க்கப்பட்டார். அது இப்போது ஐபிஎல் கிரிக்கெட்டிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு மும்பை இந்தியன்ஸ் முதலில் இஷான் கிஷனை விடுவித்தால் மட்டுமே சாத்தியம். இல்லையென்றால் அவர் ஏலத்திற்கு வரவும் மாட்டார். சிஎஸ்கே அவரை ஏலத்தில் எடுக்கவும் முடியாது. ஆனால், ரூ.15.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இஷான் கிஷன், பெரிதாக ஒன்றும் சாதிக்காத நிலையில், ஐபிஎல் 2025க்கு முன்னதாக விடுவிக்கப்படவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
77
KL Rahul, Lucknow Super Giants, IPL 2025
கேஎல் ராகுல்:
சிஎஸ்கேயின் மற்றொரு இலக்கு கேஎல் ராகுல். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி வரும் ராகுல் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக வலம் வந்தார். சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் ஒருவரான கேஎல் ராகுல் சிஎஸ்கேயில் தோனிக்கு சரியான மாற்று வீரராக இருக்கலாம்.
2022 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக இடம் பெற்று விளையாடி வருகிறார். லக்னோ அணி அவரை விடுவித்தால் மட்டுமே அவர் ஏலத்தில் இடம் பெறுவார். ஆனால், சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் கேஎல் ராகுல் அணியின் சொக்கத்தங்கம் என்பது போன்று அணியின் உரிமையாளர் பேசினார்.
ஆதலால், அவர் லக்னோ அணியில் தக்க வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஜாகீர் கான் இடம் பெற்றுள்ளார். ஆதலால் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரானது லக்னோ அணிக்கு சிறந்த சீசனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.