Test Cricket
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகின்ற 19ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Test Cricket
இதனிடையே பாகிஸ்தானைப் போன்று இந்திய அணியை தோற்கடிப்போம் என்று வங்கதேச அணி வீரர்கள் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய வங்கதேச அணி பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே படுதோல்வி அடையச் செய்து சரித்திர வெற்றியை பதிவு செய்தது.
Test Cricket
இந்நிலையில், இந்தியா போன்ற வலுவான அணியை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடித்தால் உலகில் அனைவரும் எங்களை திரும்பிப் பார்ப்பார்கள் என்று வங்கதேச வீரர் சோரிபுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார். ஆனால் பாகிஸ்தானை வீழ்த்தியதைப் போன்று இந்தியாவை எளிதில் வீழ்த்த முடியாது என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் சரியா திட்டமிடல் மற்றும் கடின பயிற்சி செய்து இந்தியாவை தோற்கடிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
Test Cricket
டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியுடன் ஒப்பிடுகையில் இந்தியா மிகவும் பலம் வாய்ந்த அணியாகும். அப்படிப்பட்ட பலம் பொருந்திய அணியை நாங்கள் சிறப்பாக எதிர் கொண்டால் மொத்த உலகமும் எங்களை திரும்பிப் பார்க்கும். எனவே இந்தியாவில் எங்களது சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினால் அது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இதற்காக நாங்கள் கடினமாக பயிற்சி செய்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
Test Cricket
மேலும், பாகிஸ்தானில் எங்களக்கு நல்ல தொடராக அமைந்தது. இதனால் நாங்கள் இந்தியாவிலும் முதல் போட்டியை வெல்ல முயற்சிப்போம். அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். எனவே எங்களுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த முயற்சி செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.