Virat Kohli: கோலியை பொத்தி பொத்தி வைக்கும் ஆர்சிபி: ஒரு முறை கூட ஏலத்திற்கே வராத விராட் கோலி: ஏன் தெரியுமா?

First Published | Sep 10, 2024, 9:49 AM IST

Virat Kohli Not Part in IPL Auction Still Now: ஐபிஎல் தொடர்களில் விராட் கோலி எப்போதும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார். 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் நெருங்கி வருவதால், கோலி தக்க வைக்கப்படுவாரா அல்லது ஏலத்தில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Virat Kohli

ஐபிஎல் தொடர்களில் ஒவ்வொரு அணியும் வீரர்களை ஏலத்தின் மூலமாக எடுத்து தங்களது அணியில் விளையாட வைக்கிறது. இது ஒவ்வொரு முறையும் நடக்கும். ஆனால், ஒரு சில வீரர்கள் மட்டும் ஐபிஎல் ஏலத்திற்கு வருவதில்லை. ஏன் என்று யாரேனும் யோசித்து பார்த்தது உண்டா? அவர்களில் விராட் கோலி முக்கியமானவர். கடந்த 17 ஆண்டுகளாக ஒரே அணிக்காக அதுவும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார்.

Indian Premier League (IPL), IPL 2025 Mega Auction

ஒவ்வொரு முறை ஏலம் வரும் போது அவர் தக்க வைத்துக் கொள்ளப்படுகிறார். ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்களை விட விராட் கோலியின் சம்பளம் மிகவும் குறைவு தான். ஆனால், தக்க வைத்துக் கொள்ளப்பட்டாலும் அவருக்கு ஒவ்வொரு ஆண்டும் கூடுதலான தொகை தான் கொடுக்கப்படுகிறது.

2014 ஆம் ஆண்டு 12.50 கோடி, 2018 முதல் 21 ஆம் ஆண்டு வரையில் ரூ.17 கோடி, 22 மற்றும் 23 ஆம் ஆண்டுகளில் ரூ.15 கோடிக்கு ஆர்சிபிக்காக விளையாடி வருகிறார். இப்போது ஏன் இதைப் பற்றி பேசுறீங்க என்று கேட்டால் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் நெருங்கி வருகிறது.

இதற்கான ஏற்பாடுகளும் தொடங்கிவிட்டன. இந்த ஏலத்திற்கு முன் எந்த வீரர்கள் தக்க வைக்கப்படுவார்கள், எந்த வீரர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மனதிலும் ஏற்பட்டுள்ளது.

Tap to resize

Virat Kohli - IPL 2025

ஒவ்வொரு முறை ஐபிஎல் ஏலம் வரும் போது விராட் கோலி மட்டும் ஏலத்திற்கு வருவதில்லை. இதற்கு காரணம், அவரது திறமையும், புகழும் தான். அதையும் தாண்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உடனான கோலியின் வாழ்க்கை முழுவதும் ஐபிஎல் ஏலத்தில் விற்கப்படவில்லை.

2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் முதல் சீசனில் இளம் வளர்ந்து வரும் வீரராக விராட் கோலி ஆர்சிபியில் இணைந்தார். அப்போது விராட் கோலி உலகக் கோப்பையை வென்ற இந்திய அண்டர்19 அணியில் ஒருவராக இடம் பெற்றிருந்தார். ஆர்சிபி அவரை நேரடியாக ஒப்பந்தம் செய்து கொண்டது.

ஆனால், 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் அண்டர்19ஐ சேர்ந்த இளம் வீரர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அப்படியிருந்தாலும், விராட் கோலி முதல் சீசனுக்கு முன் டிராப்ட் மூலமாக தேர்வு செய்யப்பட்டனர். அண்டர்19 உலகக் கோப்பையில் அவர் விளையாடியதைக் கண்டு மெர்சலான ஆர்சிபி மற்ற அணிகள் எடுப்பதற்கு முன் ஆர்சிபி அவரை தட்டி தூக்கியது.

Royal Challengers Bengaluru, IPL 2025

ஆனால், ஐபிஎல் முதல் சீசன் முதல் போட்டியில் விராட் கோலி 1 ரன் மட்டுமே எடுத்தார். 2ஆவது போட்டியிலும் 23 ரன்களும், 3ஆவது போட்டியில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 4ஆவது போட்டியில் 12 ரன்கள் சேர்த்தார். முதல் சீசன் முதல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த 17 சீசன்கள் வரையில் விராட் கோலி ஆர்சிபி அணியில் தக்க வைத்துக் கொள்ளப்பட்டார்.

இதன் காரணமாக விராட் கோலி ஏலத்தில் நுழையவில்லை. இது கோலிக்கும், ஆர்சிபிக்கும் இடையிலான நட்பையும், அவர்களுக்கு இடையில் இருக்கும் விசுவாசத்தையும் காட்டுகிறது. ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஏலத்திற்கு முன்னதாகவும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைத்துக் கொள்ளலாம். அதே போன்று விடுவித்துக் கொள்ளலாம்.

இதற்கு பிசிசிஐ அனுமதியளிக்கிறது. 2025 ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு முன்னதாக குறைந்தது 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள ஒவ்வொரு அணியும் விரும்புகிறது. இதற்கான பேச்சுவார்த்தை பிசிசிஐயிடம் நடைபெற்றது.

Virat Kohli IPL Auction 2025

எனினும், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு முறை ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாகவும் விராட் கோலி ஆர்சிபியால் தக்க வைத்துக் கொள்ளப்படுகிறார். அவர் மீது நம்பிக்கை கொண்ட ஆர்சிபி தொடர்ந்து அவரை தக்க வைத்து வருகிறார். 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாகவும் கோலி தக்க வைத்துக் கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2013 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் ஆர்சிபியின் கேப்டனாக இருந்த விராட் கோலி 143 போட்டிகள் விளையாடி 66 போட்டிகளில் வெற்றியும், 70 போட்டிகளில் தோல்வியும் பெற்று கொடுத்துள்ளார்.3 போட்டி டையில் முடிய, 4 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை.

Virat Kohli

ஒரே ஒரு முறை மட்டுமே இறுதிப் போட்டி வரை சென்றார். மொத்தமாக 4 முறை பிளே ஆஃப் வரை அணியை அழைத்துச் சென்றுள்ளார். இதுவரையில் ஐபிஎல் தொடரில் விராட் கோலி 252 போட்டிகளில் விளையாடி 8 சதங்கள், 55 அரைசதங்கள் உள்பட மொத்தமாக 8004 ரன்கள் எடுத்தார். இதில், அதிகபட்சமாக 113* ரன்கள் அடங்கும்.

ஒரு ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். அவர், 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 973 ரன்கள் குவித்தார். கடந்த சீசனில் கோலி 15 போட்டிகளில் விளையாடி 741 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்சிபி மீதான விராட் கோலியின் அர்ப்பணிப்பு மற்றும் ரசிகர்கள் உடனான அவரது அன்பு ஐபிஎல் வரலாற்றில் இதுவரையில் ஏலம் விடப்படாத வகையில் பார்த்துக் கொண்டது.

Latest Videos

click me!