IND vs BAN: கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் முத்தான சாதனையை முறியடிக்க துடிக்கும் வங்கதேச வீரர்!

First Published | Sep 10, 2024, 2:29 PM IST

டெண்டுல்கரின் ஒருநாள் கிரிக்கெட் சாதனையை விராட் கோலி முறியடித்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினின் அதிக ரன்கள் சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை. வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சச்சினின் அதிக ரன்கள் சாதனையை முஷ்பிகுர் ரஹீம் முறியடிக்க வாய்ப்புள்ளது.

IND vs BAN Test - Sachin Tendulkar Records

கிரிக்கெட்டின் கடவுளான சச்சின் டெண்டுல்கரின் ஒருநாள் கிரிக்கெட் அதிக சதங்கள் சாதனையை ரன் மெஷின் விராட் கோலி தான் 50 சதங்கள் அடித்து முறியடித்திருக்கிறார். ஆனால், ஜாம்பவான் கிரிக்கெட்டர் சச்சினின் அதிக ரன்கள் சாதனையை இதுவரையில் எந்த வீரரும் முறியடிக்கவில்லை. 664 சர்வதேச போட்டிகளில் விளையாடிய சச்சின் 34,357 ரன்கள் குவித்துள்ளார்.

India vs Bangladesh, Sachin Tendulkar

இந்த சாதனையை விராட் கோலி மட்டுமின்றி எந்த வீரரும் இதுவரையில் முறியடிக்கவில்லை. 533 போட்டிகளில் விளையாடிய கோலி 26,942 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த ஜாம்பவான்களின் பட்டியலில் 4ஆவது வரிசையில் இடம் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் படைத்த அதிக ரன்கள் சாதனையை வங்கதேச வீரர் முறியடிக்க இருக்கிறார்.

Latest Videos


Virat Kohli, India vs Bangladesh Test Cricket

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 19 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கபட்டனர். 2ஆவது டெஸ்ட் போட்டி 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரையில் கான்பூரில் நடைபெறுகிறது. டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.

இந்த நிலையில் தான் சச்சின் டெண்டுல்கரின் மிகப்பெரிய சாதனை ஒன்று முறியடிக்கப்படும் தருவாயில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் சச்சின் முதலிடத்தில் உள்ளார். அவர் 7 போட்டிகளில் 9 இன்னிங்ஸ் விளையாடி 136.66 சராசரியில் 820 ரன்கள் எடுத்தார். இதில் 5 சதங்கள் அடங்கும்.

India vs Bangladesh Test, Sachin Tendulkar

சச்சின் டெண்டுல்கர் எடுத்த 820 ரன்கள் சாதனையை வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம் முறியடிக்க இருக்கிறார். முஷ்பிகுர் ரஹீம் இந்தியாவிற்கு எதிராக 8 டெஸ்ட் போட்டிகளில் 15 இன்னிங்ஸ் விளையாடி 604 ரன்கள் எடுத்துள்ளார்.

இதில் 2 சதங்களும் அடங்கும். இந்தியாவிற்கு எதிராக நடைபெறும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முஷ்பிகுமர் ரஹீம் கூடுதலாக 217 ரன்கள் எடுத்தால் அவர் சச்சினின் அதிக ரன்கள் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களது வரிசையில் 3ஆவது இடம் பிடித்திருப்பவர் ராகுல் டிராவிட். 5 போட்டிகளில் விளையாடிய டிராவிட் 3 சதங்கள் உள்பட 560 ரன்கள் எடுத்துள்ளார்.

KL Rahul, IND vs BAN Test

சட்டேஷ்வர் புஜாரா மற்றும் விராட் கோலி இருவரும் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். புஜாரா 5 போட்டிகளில் விளையாடி 468 ரன்கள் எடுத்துள்ளார். விராட் கோலி 6 போட்டிகளில் விளையாடி 437 ரன்கள் எடுத்துள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இடம் பெற்றுள்ளார். 2024ல் இதுவரையில் ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே கோலி விளையாடியிருக்கிறார்.

ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் கூட டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். ராகுல் ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே இங்கிலாந்திற்கு எதிராக விளையாடினார். ஆனால், ரிஷப் பண்ட் 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக டெஸ்ட் அணிக்கு திரும்பியிருக்கிறார். கடைசியாக வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் பண்ட் விளையாடினார்.

India vs Bangladesh, Rishabh Pant

இதுவரையில் இரு அணிகளும் 13 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 11 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது. 2 போட்டி டிராவில் முடிந்துள்ளது. ஆனால், இந்த முறை எப்படியும் வெற்றி முத்திரை பதிக்க வேண்டும் என்ற வெறியோடு வங்கதேசம், இந்தியாவில் கால் பதிக்க இருக்கிறது. இதற்கு முன்னதாக பாகிஸ்தான் சென்ற வங்கதேசம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்று கைப்பற்றி புதிய சாதனையை பதித்தது.

click me!