India vs Australia Test Series
ரோகித் சர்மா நீக்கம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் மட்டும் வெற்றி பெற்ற இந்தியா, மற்ற போட்டிகளில் மிகவும் மோசமாக விளையாடியது. 2 டெஸ்ட்களில் படுதோல்வியை சந்தித்தது. ஒரு போட்டியில் மழையால் தோல்வியில் இருந்து தப்பியது.
இந்நிலையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இந்த தொடர் முழுவதும் படுமோசமாக பேட்டிங் செய்வது மட்டுமின்றி கேப்டன்சியிலும் சொதப்பி வந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா இந்த போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்தியா வெற்றி முதல் போட்டியில் கேப்டனாக இருந்த ஜஸ்பிரித் பும்ராவுக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது.
Rohit Sharma's Removal
ஆஸ்திரேலியா அபார பவுலிங்
ஆகாஷ் தீப் காயம் காரணமாக விலகியதால் பிரசித் கிருஷ்ணா இடம் பெற்றார். ஆஸ்திரேலிய தரப்பில் மார்ஷ் நீக்கப்பட்டதால் ஆல்ரவுண்டர் வெப்ஸ்டர் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டார். இன்று அதிகாலை 5 மணிக்கு போட்டி தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற கேப்டன் பும்ரா, இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஆகியோர் இறங்கினார்கள்.
ரோகித் சர்மா விளையாடாததால் கே.எல்.ராகுலுக்கு மீண்டும் ஒப்பனிங் வாய்ப்பு கிடைத்தது. மேகமூட்டமான சீதோஷ்ண நிலவியதால் அதை ஆஸ்திரேலிய பவுலர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டனர். தொடக்கம் முதலே சரியான லைன் அண்ட் லென் த்தில் பந்து வீசியதுடன் அதிகமான பவுன்சர்களையும் போட்டனர். இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்கத் தடுமாறிய நிலையில், இந்திய அணி 11 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்தது. கே.எல்.ராகுல் வெறும் 4 ரன்னில் ஸ்டார்க் பந்தில் கான்ஸ்டாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
மனு பாக்கர், குகேஷ் உள்பட 4 பேருக்கு 'கேல் ரத்னா'; தமிழக வீராங்கனைகள் 3 பேருக்கு அர்ஜூனா விருது அறிவிப்பு!
India vs Australia 5th Test
முதல் பந்தில் தப்பிய கோலி
இதனைத் தொடர்ந்து 10 ரன்கள் அடித்த ஜெய்ஸ்வாலும் போலண்ட் வீசிய சூப்பர் பந்தில் வெப்ஸ்டரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானர். இதன்பிறகு களம் கண்ட விராட் கோலி முதல் பந்திலேயே அவுட்டில் இருந்து தப்பித்தார். அதாவது போலண்ட் வீசிய பந்தை கோலி அடிக்க தடுக்க முயன்றபோது அந்த பந்து பேட்டில் உரசி ஸ்மித்தின் கைகளில் தஞ்சம் அடைந்தது. எல்லோரும் அவுட் என நினைத்தனர்.
ஆனால் ரீப்ளையில் பந்து தரையில் உரசியது தெரியவந்தது. இதனால் விராட் கோலி நாட் அவுட் என அறிவிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டத விராட் கோலி நிதானமாக விளையாடினார். அதிகமான அவுட் சைடு ஆப் வீசிய பந்துகளை தவிர்த்தார். மறுபக்கம் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் நிதானமாக ரன்களை சேகரித்தார்.
Rishap Pant Batting
17 ரன்னில் அவுட் ஆன கோலி
3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 40 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடியபோது உணவு இடைவேளைக்கு முன்பு கடைசி பந்தில் சுப்மன் கில் (20 ரன்) தேவையில்லாமல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதாவது ஸ்கோர் 57 ரன்னாக உயர்ந்தபோது, நாதன் லயன் வீசிய ஸ்பின் பந்தை தேவையின்றி இறங்கி அவர் அடிக்க முயன்றபோது பந்து பேட்டில் எட்ஜ் ஆகி ஸ்மித் கைகளில் தஞ்சம் அடைந்தது.
இதனைத் தொடர்ந்து விராட் கோலியும் 17 ரன்கள் எடுத்திருந்தபோது போலண்ட் பந்தில் வெப்ஸ்டரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதாவது கோலி எங்கேயோ சென்ற அவுட் சைட் ஆப் சைடு பந்தை அடிக்கப்போய் அது பேட்டில் உரசி கேட்ச் ஆனது. தற்போது வரை இந்திய அணி 76 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது. ரிஷப் பண்ட் (8 ரன்), ரவீந்திர ஜடேஜா (3 ரன்) களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் போலண்ட் 2 விக்கெட் சாய்த்தார். ஸ்டார்க், லயன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.
அச்சு அசலாய் ஜாகீர் கான் போல் பவுலிங்; சச்சினை கவர்ந்த 10 வயது சுசீலா மீனா; யார் இந்த 'குட்டி' ஜாகீர்கான்?