ரோகித் மனதை மாற்றியது யார்?
ஆஸ்திரேலியா தொடருக்கு பிறகு ரோகித் சர்மா ஒய்வு பெற இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதை மறுத்த ரோகித் சர்மா, என்னை ஓய்வு பெறும்படி யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்று கூறியிருந்தார். இந்நிலையில், மெல்பர்ன் டெஸ்ட் போட்டிக்கு பிறகு ரோகித் சர்மா ஓய்வு பெற முடிவு எடுத்ததாகவும், அவரது நலம் விரும்பிகள், கிரிக்கெட் நண்பர்கள் அவரது மனதை மாற்றியதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
அதே வேளையில் ரோஹித் சர்மா தனது முடிவை மாற்றிக்கொண்டதில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. சிட்னி டெஸ்டுக்கு முன்பு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரோகித் சர்மாவை சேர்க்க கம்பீர் மறுத்து விட்டதாகவும், ரோகித் ஆஸ்திரேலியே தொடர் முடிந்தவுடன் ஓய்வு பெற்று விடுவார் என கம்பீர் எதிர்பார்த்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.