Fact Check: ஹர்திக் பாண்ட்யா‍, ஜான்வி கபூர் டேட்டிங்? வைரலான புகைப்படங்கள்; உண்மை என்ன?

Published : Jan 13, 2025, 01:57 PM IST

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா‍வும், பாலிவுட் நடிகை ஜான்வி கபூரும் டேட்டிங் செய்ததாக சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் பரவி வருகின்றன. ஆனால் இதில் உண்மை என்ன? என்பது குறித்து இந்த செய்தியில் காணலாம்.

PREV
14
Fact Check: ஹர்திக் பாண்ட்யா‍, ஜான்வி கபூர் டேட்டிங்? வைரலான புகைப்படங்கள்; உண்மை என்ன?
Hardik Pandya and Janhvi Kapoor

ஹர்திக் பாண்ட்யா ஜான்வி கபூர் 

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரர்களில் ஒருவராக வலம் வருபவர் ஹர்திக் பாண்ட்யா. இவருக்கும் அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இருவரும் விவாகரத்து நடைமுறைகளை மேற்கொள்ள உள்ளனர். ஹர்திக் பாண்ட்யா மனைவியை விட்டு பிரிந்த பிறகு சில பாலிவுட் நடிகைகளுடன் சுற்றித் திரிவதாக பேச்சு அடிபட்டது. 

அவர் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே உடன் சுற்றிச் திரிந்ததாக வதந்திகள் பரவின. இந்நிலையில்,  ஹர்திக் பாண்ட்யாவும், பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூரும் மாலத்தீவில் டேட்டிங் செய்ததாக கூறி இருவரின் புகைப்படங்களும் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மாலத்தீவு கடற்கரைகளில் ஜோடியாக இருவரும் சுற்றித்திரிந்ததாகவும், இருவரும் நெருக்கமாக இருப்பது போல் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

24
Hardik Pandya-Janhvi Kapoor Dating?

மாலத்தீவில் டேட்டிங்?

ஆனால் இந்த புகைப்படங்களின் நம்ப்பகத்தன்மை குறித்து ஆராய்ந்தபோது, அந்த புகைப்படங்கள் போலியானது என்றும் இருவரும் டேட்டிங் செய்யவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. ஏனெனில் ஹர்திக் பாண்ட்யா, ஜான்வி கபூர் இருவரும் டேட்டிங் செய்ததற்கான எந்தவித உண்மையான ஆதாரங்களும் கிடைக்கவில்லை. மேலும் இவர்கள் இருவரின் எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆராயந்தபோது, இருவரில் ஒருவர் கூட மாலத்தீவு சென்றதற்கான எந்த ஒரு புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிரவில்லை.

மாலத்தீவில் இருவரும் டேட்டிங் செய்ததாக சமூக ஊடகங்களில் வைரலான படத்துடன் பொருந்தக்கூடிய வேறு எந்த புகைப்படங்களும் எங்கும் கிடைக்கவில்லை. இதனால் ஹர்திக் பாண்ட்யாவும், ஜான்வி கபூரும் மாலத்தீவில் ஒன்றாக சுற்றித் திரிந்ததாக பொய்யான தகவலை கூறி, போலியான புகைப்படங்களை இணையத்தில் பரவச் செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாது: சச்சின் டெண்டுல்கரின் அசைக்க முடியாத 4 இமாலய சாதனைகள்

34
Hardik Pandya

போலி புகைப்படங்கள் 

சமூகவலைத்தளங்களில் வைரலான அந்த படங்களை ஆராய்ந்தபோது, அந்த புகைப்படங்கள் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் போலியாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இந்த புகைப்படங்களை பார்க்கும் அனைவருக்கும் இது உண்மையான ஹர்திக் பாண்ட்யா, ஜான்வி கபூர் தான் என்று தெரியும் அளவுக்கு அந்த புகைப்படங்கள் தத்ரூபமாக போலியாக உருவாக்கப்பட்டுள்ளன.

44
Janhvi Kapoor

கடும் சட்டங்கள் வேண்டும் 

இதன்மூலம் ஹர்திக் பாண்ட்யாவும், ஜான்வி கபூரும் டேட்டிங் செய்யவில்லை என்றும், இருவரும் மாலத்தீக்கே  ஒன்றாகச் செல்லவில்லை எனவும் தெளிவாக தெரிகிறது. இன்றைய காலக்கட்டத்தில் AI உள்பட நவீன தொழில்நுட்பங்கள் பெருகி விட்டன. இந்த தொழில்நுட்பங்கள் நல்லதுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஒரு சிலர் இதை இதுபோன்ற தவறான செயல்களுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். 

ஹர்திக் பாண்ட்யாவும், ஜான்வி கபூர் மட்டுமின்றி பல்வேறு பிரபலங்களின் உருவத்தில் போலியான புகைப்படங்களை உருவாக்கி தவறான செய்தியை பரப்பி வருகின்றனர். இப்படிபட்ட நபர்கள் மீது நவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மட்டுமின்றி, இனிமேல் இதுபோல் செயல்கள் நடைபெறாத வகையில் கடும் சட்டங்கள் கொண்டு வர வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளன.

'கோ கோ உலகக் கோப்பை' இன்று தொடக்கம்; இந்திய போட்டி தொடங்கும் நேரம்? எதில் பார்க்கலாம்?

Read more Photos on
click me!

Recommended Stories