Rohit sharma Angry on Jaiswal
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிந்து விட்ட நிலையில், பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இமாலய வெற்றி பெற்றது. அதே வேளையில் 2வது பிங் பால் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் வரும் 14ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முன்னிலை பெறவும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளவும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது அவசியம். இதற்காக அடிலெய்டில் இருந்து பிரிஸ்பேனுக்கு விமானம் மூலம் வந்த இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Yashasvi Jaiswal Training
முன்னதாக இந்திய அணி வீரர்கள்அடிலெய்டு மைதானத்தில் இருந்து அடிலெய்டு விமான நிலையத்துக்கு ஜெய்ஸ்வாலை விட்டு வந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது அடிலெய்டில் ஹோட்டலில் இருந்து வெளியேறிய் இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேருந்தில் ஏறி அடிலெய்டு விமான நிலையம் செல்ல தயாராக இருந்தனர். அனைத்து வீரர்களும் வந்தடைந்த நிலையில், ஜெய்ஸ்வால் ஹோட்டல் அறையில் இருந்து வெளியே வரவில்லை.
ஷாருக்கானின் முதல் சாய்ஸ் KKR இல்லை; ரூ.1,723 கோடி மதிப்புடைய இந்த அணிதான்; எந்த டீம்?
India vs Australia Test Series
அவருக்காக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் மற்ற வீரர்கள் சுமார் 20 நிமிடம் வரை காத்திருந்தனர். ஆனாலும் ஜெய்ஸ்வால் வராததால் அவரை விட்டு விட்டு பேருந்து விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றது. பின்னர் ஹோட்டல் அறையில் இருந்து வெளியே வந்த ஜெய்ஸ்வால் பேருந்து சென்று விட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் ஜெய்ஸ்வாலை ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்த கார் மூலம் அடிலெய்டு விமான நிலையம் அழைத்து சென்றிருக்கிறார்கள்.