இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிந்து விட்ட நிலையில், பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இமாலய வெற்றி பெற்றது. அதே வேளையில் 2வது பிங் பால் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது.
அணிக்கு தூணாக இருக்க வேண்டிய முன்னணி வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் படுமோசமாக பேட்டிங் செய்ததே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகும். மேலும் பும்ரா, சிராஜை தவிர 3வது பவுலரான ஹர்சித் ராணாவும், 4வது பவுலரான ரவிச்சந்திரன் அஸ்வினும் சரியாக பந்துவீசாததும் தோல்விக்கு ஒரு காரணமாகும்.