இது தொடர்பாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த லலித் மோடி, ''ஷாருக்கான் முதன்முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியை தான் வாங்க திட்டமிட்டார். ஆனால் மும்பை அணியை முகேஷ் அம்பானி தேர்வு செய்ததால், ஷாருக்கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தேர்வு செய்தார். ஷாருக்கான் ஐபிஎல் வளர பெரும் காரணமாக இருந்தார்.
அவர் கிரிக்கெட்டை அனைவரும் விரும்பும் பொழுதுபோக்காக மாற்ற்றினார். பெண்கள் மற்றும் குழந்தைகளை ஸ்டேடியங்களுக்குள் கொண்டு வந்தார். இது ஐபிஎல் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்தது. முதலில் ஐபிஎல் தொடக்க சீசனைக் காண பிரபலங்கள் வரவில்லை. ஆனால் ஷாருக்கானை பார்த்தபின்பு தீபிகா படுகோன், அக்ஷய் குமார் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் வந்தனர். ஐபிஎல்லை அனைவரிடமும் கொண்டு சேர்த்தது ஷாருக்கான் தான்'' என்று தெரிவித்தார்.