'பிரிஸ்பேனில் குறி தவறாது'; அடித்துச் சொல்லும் ரோகித்; 3வது டெஸ்ட்டில் இந்த வீரர்கள் மாற்றம்?

கடந்த கால வெற்றியை பார்த்து பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிக்கு தயாராவோம் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.
 

Rohit Sharma says we will prepare for Brisbane Test ray
India vs Australia Test

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இமாலய வெற்றி பெற்றது.  இரு அணிகளுக்கு இடையிலான 2வது  பிங் பால் டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடந்தது. 

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வெறும் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிஅ வீரர் மிட்ச்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்பு முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 337 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. டிராவிஸ் ஹெட் 141 பந்தில் 140 ரன்கள் எடுத்து அதிரடி சதம் விளாசினார். இந்திய தரப்பில் பும்ரா, சிராஜ் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.
 

Rohit Sharma Batting


157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 175 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 19 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அந்த அணி அதை விக்கெட் இழக்காமல் சுலபமாக எட்டியது. ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் என அனைத்து பேட்ஸ்மேன்களும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. மேலும் பும்ரா, சிராஜை தவிர 3வது மற்றும் 4வது பவுலர்களும் சரியாக பந்துவீசாததும் தோல்விக்கு ஒரு காரணமாகும். 

6 மாதத்தில் 42 பிராண்ட்கள்; ஷாருக்கான், அமிதாப்பச்சனை தூக்கி சாப்பிட்ட 'தல' தோனி!


India lost 2nd Test

இந்த போட்டிக்கு பிறகு பேசிய கேப்டன் ரோகித் சர்மா, ''இது எங்களுக்கு ஏமாற்றம் தரும் வரமாகி விட்டது. ஆட்டத்தில் வெற்றி பெறும் அளவுக்கு நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. ஆஸ்திரேலியா எங்களை விட சிறப்பாக விளையாடியது. ஆட்டத்தின் சில தருணங்களில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாதது தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது. பெர்த்தில் சிறப்பாக விளையாடினோம். ஆனால் இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியும் மிகவும் சவாலானதாகும். பெர்த்தில் எப்படி விளையாடினோம், கடந்த முறை பிரிஸ்பேனில் எப்படி வெற்றி பெற்றோம் என்பதை பார்த்து, அடுத்த போட்டிக்கு தயாராவோம்'' என்றார்.

India vs Australia 3rd Test


இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. 2வது போட்டியில் ஹர்சித் ராணா அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தார். விக்கெட்டும் எடுக்கவில்லை. இதனால் பவுன்ஸ் நிறைந்த பிரிஸ்பேன் கப்பா டெஸ்ட் போட்டியில் ஆகாஷ் தீப் அல்லது பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நடுவரிசையில் பேட்டிங்கை பலப்படுத்தும் வகையில் அஸ்வினுக்கு பதிலாக பேட்டிங் மற்றும் ஸ்பின் பவுலிங் வீசும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர ரோகித் சர்மா மீண்டும் ஓப்பனிங்கிலும், கே.எல்.ராகுல் நடுவரிசையிலும் களமிறங்க வாய்ப்புள்ளது.

சொன்னதை செய்த கம்மின்ஸ்; இந்திய அணி படுதோல்வி; மண்ணை கவ்வ இதுதான் காரணம்!

Latest Videos

click me!