6 மாதத்தில் 42 பிராண்ட்கள்; ஷாருக்கான், அமிதாப்பச்சனை தூக்கி சாப்பிட்ட 'தல' தோனி!

Published : Dec 08, 2024, 02:23 PM ISTUpdated : Dec 08, 2024, 02:28 PM IST

மகேந்திர சிங் தோனி 6 மாதத்தில் 42 பிராண்ட் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இது பாலிவுட் நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷாரூக்கானை விட அதிகம் ஆகும்.   

PREV
14
6 மாதத்தில் 42 பிராண்ட்கள்; ஷாருக்கான், அமிதாப்பச்சனை தூக்கி சாப்பிட்ட 'தல' தோனி!
Mahendra Singh Dhoni

கிரிக்கெடில் தவிர்க்க முடியாதவர் மகேந்திர சிங் தோனி. 'கூல் கேப்டன்' தோனி இந்திய அணிக்கு டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பையை வென்று கொடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் கலக்கி வரும் 'தல' தோனி, தமிழ்நாட்டு மக்களின் செல்லப்பிள்ளையாக மாறி விட்டார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வயதாகி விட்டாலும் இமாலய சிக்சர் அடிக்கும் திறன், அணியை வழிநடத்தும் திறன் ஆகியவை குறையாததால் தோனிக்கு இருக்கும் மவுசு இன்னும் குறையவில்லை. இதைபறைசாற்றும் விதமாக 2024ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 42 பிராண்ட் ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளார். TAM Media Research இன் சமீபத்திய அறிக்கையின்படி, 2024ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் தோனி 42 பிராண்ட் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். சமீபத்தில் அவர் யூரோகிரிப் டயர்ஸ் பிராண்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

24
Dhoni CSK

பாலிவுட் திரையுலக சூப்பர் ஸ்டார்கள் அமிதாப்பச்சன் 41 பிராண்ட் ஒப்பந்தங்களையும், ஷாரூக்கான் 34 பிராண்ட் ஒப்பந்தங்களையும் பெற்றிருக்கும் நிலையில், 'தல' தோனி இவர்களை அசால்ட்டாக ஓவர்டேக் செய்துள்ளார். ஆட்டோமொபைல் நிறுவமான சிட்ரோயன், ஸ்டார்ட் அப் நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸ், மாஸ்டர்கார்டு, EMotoரட் ஆகிய மிகப்பெரிய பிரான்ட் ஒப்பந்தங்களிலும் தோனி கையெழுத்திட்டுள்ளார்.

மேலும் பிளிப்கார்ட்டுக்குச் சொந்தமான கிளியர்ட்ரிப், பெப்சிகோவின் லேஸ், ஈமோடோராட், கல்ஃப் ஆயில், ஓரியண்ட் எலக்ட்ரிக் மற்றும் எக்ஸ்ப்ளோசிவ் வே போன்ற உயர்தர பிராண்ட் ஒப்பந்தங்களையும் தோனி பெற்றுள்ளார். தோனியின் ஒட்டுமொத்த நிகர சொத்து மதிப்பு ரூ.1.040 கோடி என்று தகவல்கள் கூறுகின்றன.

சொன்னதை செய்த கம்மின்ஸ்; இந்திய அணி படுதோல்வி; மண்ணை கவ்வ இதுதான் காரணம்!

34
Dhoni Signed 42 brand deals

தோனியின் சொத்துகளை பார்த்தால் சொந்த ஊரான ராஞ்சியில் 7 ஏக்கர் பரப்பளவில் ரூ.6 கோடி மதிப்பில் ஒரு பண்ணை வீடும், டேராடூனில் ரூ.18 கோடி மதிப்பில் ஒரு சொகுசு பங்களாவும் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கார் மற்றும் பைக் பிரியரான தோனி வீட்டில் விலை உயர்ந்த பைக்குகள், கார்களை வைத்துள்ளார்.

44
Dhoni Networth

ஹம்மர் ஹெச், ஆடி, மெர்சிடெஸ் பென்ஸ், ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோ, ரோவர் ஃப்ரீ லேண்ட், மகேந்திரா ஸ்கார்பியோ என பல கோடி, பல லட்சம் மதிப்பிலான கார்கள் தோனியிடம் இருக்கின்றன. மேலும் ஹார்லி டேவிட்சன், டுகாட்டி 1098, கான்பிடேரட் ஹெலிகெட் உள்பட சுமார் 70 வகையான பைக்குகள் தோனியின் வீட்டை அலங்கரிக்கின்றன.

மகேந்திர சிங் தோனி 6 மாதத்தில் 42 பிராண்ட் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இது பாலிவுட் நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷாரூக்கானை விட அதிகம் ஆகும். 

'ஹெட் சொல்வது பச்சை பொய், நடந்தது இதுதான்'; உண்மையை போட்டுடைத்த சிராஜ்!

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories