ஆஸ்திரேலியா தொடருக்கு பிறகு ஓய்வா? டிரஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது? மனம் திறந்து பேசிய ரோகித் சர்மா!

First Published | Jan 4, 2025, 8:41 AM IST

ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு ஓய்வு பெற முடிவா?; டிரஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது? என்பது குறித்து ரோகித் சர்மா மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Indian Captain Rohit Sharma

ரோகித் சர்மா விலகல் 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. 2 போட்டியில் படுதோல்வி அடைந்தது. ஒரு போட்டியில் தோல்வி அடைந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கிய நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இடம்பெறவில்லை.

ஆஸ்திரேலியா தொடர் முழுவதும் படுமோசமாக பேட்டிங் செய்து வரும் ரோகித் சர்மா, கேப்டன்சியிலும் சரியாக செயல்படவில்லை. இதனால் அவர் 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் ரோகித் சர்மா தானாகவே கடைசி போட்டியில் இருந்து விலகியதாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன.

India vs Australia Test Series

கோபத்துடன் பேசிய கம்பீர் 

இதற்கிடையே 4வது டெஸ்ட் போட்டியில் அணியின் படுதோல்வியால் விரக்தி அடைந்த கம்பீர், வீரர்களிடம் டிரஸ்ஸிங் ரூமில் கடும் கோபத்துடன் பேசியதாக தகவல் வெளியானது. மூத்த வீரர்கள் பெயரை வெளிப்படையாக கூறாத கம்பிர், ''அணிக்காக சரியாக விளையாடுபவர்கள் தான் எனக்கு வேண்டும். அணிக்கு போதுமான பங்களிப்பு செய்யாத வீரர்கள் நன்றி கூறி வழியனுப்பி வைக்கப்படுவார்கள்''என்று அதிருப்தியை வெளிக்காட்டியாதாக தகவல்கள் பரவின.

இதனால் ரோகித் சர்மா, விராட் கோலி கடும் விரக்தியில் இருப்பதகாவும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு பிறகு ரோகித் சர்மா ஓய்வு அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வேகமாக பரவின. இந்நிலையில், ஆஸ்திரேலியா தொடருக்கு பிறகு ஓய்வு பெற முடிவா? என்பது குறித்து ரோகித் சர்மா மனம் திறந்து பேசியுள்ளார். 

46 வருட சாதனையை அடித்து நொறுக்கிய ஜஸ்பிரித் பும்ரா: புதிய வரலாற்று சாதனை
 

Tap to resize

Rohit sharma Batting

மனம் திறந்து பேசிய ரோகித் சர்மா

இது தொடர்பாக சிட்னியில் ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ரோகித் சர்மா, ''நான் ஃபார்மில் இல்லை. என்னால் ரன்கள் எடுக்க முடியவில்லை. 5வது டெஸ்ட் போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஆகையால் நான் கடைசி போட்டியில் இருந்து விலக முடிவெடுத்தேன். இது குறித்து பயிற்சியாளர், தேர்வாளரிடம் தெரிவித்தேன். அவர்கள் எனது முடிவை ஏற்றுக் கொண்டனர்'' என்றார்.

தொடர்ந்து பேசிய ரோகித் சர்மா, ''மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கு பிறகே இந்த சிந்தனை எனது மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அதிகமான ரன்கள் அடித்தும் என்னால் அதை செய்ய முடியவில்லை. ஆகவே இந்தப் போட்டியில் இருந்து ஒதுங்குவது எனக்கு முக்கியமானது என்று கருதினேன்'' என்று கூறினார். அப்போது ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுகிறீர்களா? என ரோகித் சர்மாவிடம் கேட்கப்பட்டது. 

Rohit Sharma Interview

நான் ஓய்வு பெற மாட்டேன் 

இதற்கு பதில் அளித்த அவர், ''நான் ஓய்வு முடிவு எடுக்கவிலை. ஓய்வு பெற போவதில்லை. கடைசி போட்டியில் இருந்து தான் விலகி இருக்கிறேன். ஐந்து மாதங்களுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் நிகழ்காலத்தில் மட்டும் கவனம் செலுத்த விரும்புகிறேன். இந்த தொடரில் நான் ரன்கள் அடிக்காததால் ஐந்து மாதங்களுக்குப் பிறகும் நான் இப்படியே ரன்கள் அடிக்காமல் இருப்பேன் என்பதை சொல்ல முடியாது. ஏனெனில் ஒவ்வொரு நாளும் வாழ்க்கை மாறுகிறது. நான் என்னை நம்புகிறேன்," என்று விளக்கம் அளித்தார்.

மேலும் இது குறித்து பேசிய ரோகித் சர்மா, ''நான் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் நீண்ட காலம் விளையாடி வருகிறேன். நான் எப்போது ஓய்வு பெற வேண்டும் அல்லது வெளியே உட்கார வேண்டும் அல்லது அணியை வழிநடத்த வேண்டும் என்பதை வெளியில் இருந்து யாரும் முடிவு செய்ய முடியாது. நான் விவேகமானவன், முதிர்ச்சியடைந்தவன். இரண்டு குழந்தைகளுக்கு தந்தை. வாழ்க்கையில் எனக்கு என்ன வேண்டும் என்று எனக்குத் தெரியும்'' என்று முதிர்ச்சியுடன் பேசினார்.

ரோகித் சர்மாவை போல் தொடரில் இருந்து பாதியில் விலகிய சர்வதேச வீரர்கள் யார்? யார்?

India vs Australia 5th Test

பும்ராவுக்கு பாராட்டு 

இதேபோல் டிரஸ்ஸிங் ரூமில் நடந்தது குறித்து பேசிய ரோகித் சர்மா, ''இந்திய அணி வீரர்கள் தங்கள் வேலையை சிறப்பாக செய்கிறார்கள். பும்ரா அணியை சிறப்பாக வழிநடத்துகிறார். இந்திய அணியின் பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர்களிடம் உரையாடல் மிகவும் எளிமையாக இருந்தது. அணியின் தேவைக்கெற்ப ஒவ்வொரு வீரர்களும் செயல்படுகிறோம்'' என்று கூறினார்.

பார்ம் அவுட் காரணமாக ஒரு இந்திய அணியின் கேப்டன் தொடரின் பாதியில் இருந்து விலகுவது இதுவே முதன்முறையாகும். கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெறும் 6 சராசரியுடன் 31 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!