ரூ. 450 கோடி மோசடி வழக்கு, சுப்மன் கில் உள்பட குஜராத் டைட்டன்ஸ் வீரர்களுக்கு சம்மன்?

First Published | Jan 3, 2025, 7:28 PM IST

Shubman Gill Top 4 Gujarat Titans Players involved in Chit Fund Scam : ரூ.450 கோடி மோசடி தொடர்பான வழக்கில் குஜராத் டைட்டன்ஸ் வீரர்களான கேப்டன் சுபமன் கில் உள்பட 4 வீரர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

Rs 450 crore chit fund scam, Gujarat Titans Players, Shuban Gill

Shubman Gill Involved in Rs 450 crore chit fund scam : குஜராத்தில் ரூ. 450 கோடி மோசடி வழக்கில் சுப்மன் கில் உட்பட குஜராத் டைட்டன்ஸ் அணியின் 4 கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வழக்கை குஜராத் CID குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். சுப்மன் கில்லுடன் சாய் சுதர்சன், ராகுல் திவேதியா, மோகித் சர்மா ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. நான்கு கிரிக்கெட் வீரர்களுக்கும் சம்மன் அனுப்ப குஜராத் CID குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

CID, Chit Fund Scam, Rahul Tewatia, Mohit Sharma

சமீபத்தில், மோசடியின் முக்கிய குற்றவாளியான பூபேந்திரசிங் ஜாலாவை அதிகாரிகள் விசாரித்தனர். கிரிக்கெட் வீரர்கள் மோசடியில் முதலீடு செய்ததாகவும், அந்த பணத்தை திரும்ப கொடுக்க முடியவில்லை என்றும் ஜாலா தெரிவித்தார். அவரது வாக்கு மூலத்தின் அடிப்படையில், மோசடியுடன் தொடர்புடைய கிரிக்கெட் வீரர்கள் மீது குஜராத் CID போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சுப்மன் கில் தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவிற்கு பதிலாக இடம் பெற்று விளையாடி வருகிறார்.  இந்தப் போட்டிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்புவார்கள். அதன் பிறகு சுப்மன் கில் உட்பட நான்கு கிரிக்கெட் வீரர்களுக்கும் சம்மன் அனுப்பப்படலாம் என்று கூறப்படுகிறது.

Tap to resize

Rs 450 crore chit fund scam, Gujarat Titans Players

மோசடி நடந்தது எப்படி?

குஜராத் CIDயின் கூற்றுப்படி, ஜாலா தலோத், ஹிம்மத்நகர், வதோதரா உட்பட குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களில் அலுவலகங்களைத் திறந்துள்ளார். முதலீட்டாளர்களிடமிருந்து பணம் திரட்ட பல முகவர்களை நியமித்துள்ளார். ICICI வங்கி மற்றும் IFC வங்கி மூலம் ரூ. 6,000 கோடி பரிவர்த்தனை செய்துள்ளார். 2024 IPL-ல் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனான சுப்மன் கில் இந்த மோசடியில் ரூ.1.95 கோடி முதலீடு செய்துள்ளார். மோகித், சுதர்சன் மற்றும் திவேதியா குறைந்த தொகையை முதலீடு செய்துள்ளனர். இது குறித்து கிரிக்கெட் வீரர்கள் யாரும் பதிலளிக்கவில்லை. எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

IPL 2025, Shubman Gill, Gujarat Titans, CID, Chit Fund Scam

விசாரணைக்கு கிரிக்கெட் வீரர்களின் ஒத்துழைப்பு இருக்குமா?

துணை காவல் ஆய்வாளர் ஜெனரல் (CID-குற்றப்பிரிவு) பரீக்ஷித் ரத்தோர் கூறுகையில், அதிக வட்டி தருவதாகக் கூறி முதலீட்டாளர்களிடமிருந்து பணம் திரட்டியதாக ஜாலாவின் நிறுவனமான பி.ஜெட். நிதி சேவைகளின் முகவர்கள் தெரிவித்தனர். மோசடி புகார்கள் வந்ததை அடுத்து CID விசாரணையைத் தொடங்கியது. அப்போது ஜாலா தலைமறைவானார். ஒரு மாதம் கழித்து, டிசம்பர் 27 அன்று குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஜனவரி 4 வரை ஜாலா காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் மேலும் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!