CSK
ஐபிஎல் 2025 தொடருக்கான ஏலம் கடந்த நவம்பர் மாதம் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது. நட்சத்திர வீரர்கள் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் உட்பட வீரர்கள் பலரும் பல கோடிகளில் அணிகளால் விளைக்கு வங்கப்பட்டனர். இந்த சீசனில் சென்னை அணியின் (Chennai Super Kings) நடவடிக்கை சென்னை ரசிகர்களிடையே படுகுஷியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2009 முதல் 2015 வரை சென்னை அணிக்காக விளையாடிய ரவிச்சந்திரன் அஷ்வினை மீண்டும் ஏலத்தில் எடுத்துக் கொண்ட நிகழ்வு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது.
CSK
மேலும் கடந்த சீசன்களில் சென்னை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா உள்ளிட்டவர்கள் மீண்டும் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். முந்தைய வீரர்கள் பலரும் மீண்டும் சென்னை அணிக்கு அழைத்து வரப்பட்டுள்ளதால் வரக்கூடிய சீசனை சென்னை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.
CSK
ஐபிஎல் 18வது சீசன் (IPL 2025) வருகின்ற மார்ச் மாதம் 14ம் தேதி தொடங்க உள்ளது. ஆனால் ஐபிஎல்.ன் முதல் 3 வாரங்களில் நியூசிலாந்து அணி பாகிஸ்தாக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது. 5 டி20, 3 ஒருநாள் போட்டி என நடைபெறும் இந்த தொடர் மார்ச் 16ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால் நியூசிலாந்து வீரர்களான டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், லக்கி பெர்குசன், கிளென் பிலிப்ஸ் மற்றும் பெவன் ஜேக்கப்ஸ் உள்ளிட்டோர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
CSK
ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய நியூசிலாந்து அணியில் பல வீரர்கள் பங்கேற்கவில்லை. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை விரும்பாமல் அவர்கள் தொடரை புறக்கணித்தனர். அதே போன்று இந்த தொடரையும் நியூசிலாந்து வீரர்கள் புறக்கணிக்கும் பட்சத்தில் ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு உள்ளது.