ஐபிஎல் 2025: பஞ்சாப் அணிக்கு பெரும் பின்னடைவு! முக்கிய பாஸ்ட் பவுலர் விலகல்!
பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் லாக்கி பெர்குசன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் லாக்கி பெர்குசன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
Lockie Ferguson ruled out from the IPL: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் வலிமையான அணிகளில் ஒன்றாக திகழும் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி பெற்று இரண்டில் தோல்வி அடைந்து 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி இன்று நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக அந்த அணியின் பாஸ்ட் பவுலர் லாக்கி பெர்குசன் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 2 பந்துகளை மட்டுமே வீசிய லாக்கி பெர்குசன், தொடப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதான் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ், லாக்கி பெர்குசன் இந்த சீசனில் காலவரையின்றி விளையாட மாட்டார் என்றும் இந்த சீசனில் அவர் மீண்டும் விளையாடுவது சந்தேகமே எனவும் உறுதிப்படுத்தியுள்ளார். ஃபெர்குசன் விளையாடிய நான்கு ஆட்டங்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிகச்சிறந்த பாஸ்ட் பவுலரான அவர் விலகி இருப்பது பஞ்சாப் அணிக்கு பெரும் பின்னடைவாகும்.
முதல் போட்டியிலேயே தோனியின் மனதை கவர்ந்த அதிரடி வீரர்! யார் இந்த ஷேக் ரஷீத்?
லாக்கி ஃபெர்குசன் விலகியதால் அவருக்கு பதிலாக யார் சேர்க்கப்படுவார்கள்? என்பது தெரியவில்லை.
அவருக்கு பதிலாக அஸ்மத்துல்லா உமர்சாய் அணியில் இடம் பெறலாம். ஆனால் அவர் மித வேகப்பந்து வீச்சாளர். இதனால் லாக்கி ஃபெர்குசனுக்கு பதிலாக பாஸ்ட் பவுலர் வைசாக் விஜய்குமார் அணியில் நிரந்தரமாக இடம்பிடிக்கலாம்.
பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும் பவுலிங்கில் எதிர்பார்த்த அளவு செயல்படவில்லை. மிக முக்கியமாக உலகின் சிறந்த ஸ்பின் பவுலர் யுஸ்வேந்திர சஹல் விக்கெட்டுகளை வீழ்த்த தடுமாறி வருகிறார். இதனால் தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 245 ரன்கள் எடுத்தும் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது.
இது தொடர்பாக பேசிய ஜேம்ஸ் ஹோப்ஸ், ''யுஸ்வேந்திர சஹல் எங்களுக்கு மிகவும் முக்கியமான பவுலர். அவர் முக்கியமான நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரை இன்னும் அதிகமாக நாங்கள் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இன்னும் எங்களுக்கு 5 ஆட்டங்கள் மட்டுமே உள்ளது, ஐபிஎல்லை வெல்ல சஹல் எங்களுக்கு தேவை'' என்றார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த தோனி! 43 வயதிலும் தரமான சம்பவம்!