ஷேக் ரஷீத் வெற்றிக்கு பின்னால் தந்தையின் தியாகம்
ஷேக் ரஷீத்தை கிரிக்கெட் வீரராக்க வேண்டும் என்ற ஆசையில் அவரது தந்தை ஷேக் பலீஷா தனது தனியார் வங்கி வேலையை விட்டுவிட்டார். சிறந்த பயிற்சி அளிக்க ஒவ்வொரு நாளும் ரஷீத்தை மங்களகிரியிலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நெட் பயிற்சிக்கு அழைத்துச் செல்வார். தந்தையின் தியாகம் இன்று பலன் அளித்துள்ளது. தனது மகனை இந்தியாவின் எதிர்கால சூப்பர் ஸ்டார் ஆகும் பாதையில் கொண்டு வந்துள்ளார்.
அண்டர்-19 உலகக் கோப்பை சாம்பியன் ஷேக் ரஷீத்
2022-இல் யாஷ் துல் தலைமையில் இந்தியா அண்டர்-19 உலகக் கோப்பையை வென்றபோது ஷேக் ரஷீத் துணை கேப்டனாக இருந்தார். அவர் அந்த தொடரில் 4 போட்டிகளில் 201 ரன்கள் எடுத்து அணிக்கு முக்கியமான இன்னிங்ஸ்களை விளையாடினார். அரையிறுதியில் 94 ரன்களும், இறுதிப் போட்டியில் அரைசதமும் அடித்த ஷேக் ரஷீத், இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய வீரராக இருந்தார்.