ஷேன் வார்ன் இறப்புக்கு 'அந்த' மாத்திரை தான் காரணமா? 3 ஆண்டுகளாக மறைக்கப்பட்ட உண்மை!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் மரணத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் மரணத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
Shocking Information Released About Shane Warne death: ஆஸ்திரேலிய பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னின் மரணத்திற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது இறப்பில் முக்கிய உண்மையை மூடி மறைத்ததாக ஒரு அதிர்ச்சியளிக்கும் அறிக்கை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி ஷேன் வார்னின் திடீர் மரணச் செய்தியால் கிரிக்கெட் உலகம் அதிர்ச்சியடைந்தது. அவர் இறக்கும் போது வயது 52. தாய்லாந்தின் கோ சாமுயில் தனது நண்பர்களுடன் விடுமுறையைக் கழித்த வார்னே, மாரடைப்பால் இறந்தார். மற்றொரு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ராட் மார்ஷும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு நாள் கழித்து ஷேன் வார்ன் காலமானார். வார்னின் மரணச் செய்தி கிரிக்கெட் உலகை உலுக்கியது.
ஷேன் வார்னின் திடீர் மரணம் குறித்து தாய்லாந்து உள்ளூர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, மரணத்திற்கு இயற்கையான மாரடைப்பே காரணம் என்று கூறினர். இந்நிலையில், ஷேன் வார்ன் மரணம் குறித்த சமீபத்திய அறிக்கை அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.
டெய்லி மெயில் யுகே அறிக்கையின்படி, ஷேன் வார்னின் மரணத்தில் இந்தியாவைச் சேர்ந்த காமக்ரா மாத்திரையை அவரது அறையிலிருந்து அகற்றி தாய்லாந்து அதிகாரிகள் முக்கிய விவரத்தை மறைத்துள்ளது தெரியவந்துள்ளது. 'காமக்ரா' என்பது விறைப்புத்தன்மைக்கு பயன்படுத்தப்படும் 'பாலியல் மருந்து' ஆகும்.
உலகின் பிரபல கிரிக்கெட் வீரரான வார்னே 'காமக்ரா' உட்கொண்ட செய்தி வெளிவருவதை அவர்கள் விரும்பவில்லை. இதனால் அவரது மரணத்தைச் சுற்றி தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும் என்று அஞ்சியதால், ஆஸ்திரேலியாவின் உயர் அதிகாரிகள் அந்த பாட்டிலை அகற்ற உத்தரவிட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"பாட்டிலை அகற்றும்படி எங்கள் மேலதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவுகள் மேலிருந்து வந்தன, ஆஸ்திரேலியாவின் மூத்த அதிகாரிகளும் இதில் ஈடுபட்டதாக நான் நினைக்கிறேன், ஏனென்றால் ஆஸ்திரேலியாவின் அடையாளமாக விளங்கிய ஒருவர் இப்படி ஒரு முடிவைக் கொண்டிருக்க அவர்கள் விரும்பவில்லை." என்று போலீஸ் அதிகாரி டெய்லி மெயிலிடம் கூறினார்.
"எனவே, அவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார் என்றும், அதற்கு என்ன காரணம் என்று வேறு எந்த விவரங்களும் இல்லை என்றும் அதிகாரப்பூர்வ அறிக்கை வந்தது. 'காமக்ரா'வை யாரும் உறுதிப்படுத்த வரமாட்டார்கள், ஏனெனில் அது ஒரு முக்கியமான விஷயமாகவே உள்ளது. இதன் பின்னணியில் நிறைய சக்திவாய்ந்த கண்ணுக்கு தெரியாத கைகள் இருந்தன" என்று அவர் மேலும் கூறினார்.
ஷேன் வார்னே இருந்த இடத்தில் இரத்தம் மற்றும் வாந்தி இருந்ததாகவும், ஆஸ்திரேலிய அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி காமக்ரா பாட்டிலை அகற்றினோம் என்றும் போலீஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
"அது ஒரு பாட்டில், ஆனால் அவர் எவ்வளவு எடுத்தார் என்று எங்களுக்குத் தெரியாது. அந்த இடத்தில் வாந்தி மற்றும் இரத்தம் இருந்தது. ஆஸ்திரேலிய அதிகாரிகள் இது வெளியே தெரிய வேண்டாம் என்று கூறியதால் நாங்கள் பாட்டிலை அகற்றினோம்" என்று அதிகாரி கூறியுள்ளார்.
தாய்லாந்துக்குச் செல்வதற்கு முன்பு, ஷேன் வார்னே இதய சம்பந்தமான பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். ஷேன் வார்னின் மரணத்திற்கான அதிகாரப்பூர்வ காரணம் இன்றுவரை தெரியவில்லை. மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு மற்றும் புகைபிடித்தல் ஆகியவை அவரது உடல்நிலை மோசமடைந்ததற்கான காரணங்கள் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா மருத்துவர் தெரிவித்தார்.
ஷேன் வார்னே கிரிக்கெட் விளையாட்டில் மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர். 700 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் இவர் தான். சர்வதேச கிரிக்கெட்டில், வார்னே 339 போட்டிகளில் 1001 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வார்னே 1999 ஓடிஐ உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
SRH vs DC: ஸ்டார்க் மிரட்டல் பந்துவீச்சு! சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஊதித்தள்ளிய டெல்லி!