CSK vs RR: ராஜஸ்தானை 200 ரன்னுக்குள் முடக்கிய சிஎஸ்கே! சவாலான இலக்கை எட்டிப் பிடிக்குமா?
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 182 ரன்கள் அடித்துள்ளது. சவாலான இலக்கை நோக்கி சிஎஸ்கே பேட்டிங் செய்கிறது.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 182 ரன்கள் அடித்துள்ளது. சவாலான இலக்கை நோக்கி சிஎஸ்கே பேட்டிங் செய்கிறது.
IPL: Chennai Super Kings vs Rajasthan Royals: ஐபிஎல் கிரிக்கெடில் கவுகாத்தி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்திலேயே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஒப்பனிங்கில் களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னில் கலீல் அகமது பந்தில் கேட்ச் ஆனார்.
பின்பு சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்ந்த நிதிஷ் ராணா அதிரடியில் வெளுத்துக் கட்டினார். குறிப்பாக அஸ்வினின் ஒவரில் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசினார். மறுமுனையில் சஞ்சு அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய நிதிஷ் ராணா 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஐபிஎல்லில் அவரது அதிவேக அரைசதம் இதுவாகும். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த அவர் துரதிருஷ்டவமாக அஸ்வின் வீசிய வைடு பந்தில் இறங்கி அடிக்கப்போய் ஸ்டெம்பிங் ஆனார். நிதிஷ் ராணா 36 பந்துகளில் 10 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 81 ரன்கள் எடுத்தார்.
SRH vs DC: ஸ்டார்க் மிரட்டல் பந்துவீச்சு! சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஊதித்தள்ளிய டெல்லி!
இதனைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் 20 ரன்னில் நூர் அகமது பந்தில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த துருவ் ஜூரலையும் (3 ரன்) நூர் அகமது காலி செய்தார். பின்பு வனிந்து ஹசரங்காவும் (4) ஜடேஜாவின் பந்தில் விஜய் சங்கரின் சூப்பர் கேட்ச்சில் வெளியேறினார். இதனால் ராஜஸ்தானின் ரன்வேகம் குறைந்தது. ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் பொறுப்பு கேப்டன் ரியான் பராக் அதிரடியாக மட்டையை சுழற்றினார்.
28 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 37 ரன்கள் அடித்த அவர் பதிரனா பந்தில் போல்ட் ஆனார். தொடர்ந்து ஜோப்ரா ஆர்ச்சர் ரன் ஏதும் எடுக்காமல் கலீல் அகமது பந்தில் அவுட் ஆனார். கடைசி கட்டத்தில் யாரும் பெரிய அளவில் அடிக்காததால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 190 ரன்களை தாண்ட முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழந்து 182 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே தரப்பில் நூர் அகமது, கலீல் அகமது, பதிரனா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஜேமி ஓவர்டன் 2 ஓவர்களில் 30 ரன்களை வாரி வழங்கினார்.
183 என்ற சவாலான இலக்கை நோக்கி சிஎஸ்கே பேட்டிங் செய்கிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஐபிஎல் 18வது ஆண்டு விழாவையொட்டி சிஎஸ்கே முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பிசிசிஐ சார்பில் நினைவுப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Hardik Pandya: மீண்டும் அதே தவறு! ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை?