SRH vs DC: ஸ்டார்க் மிரட்டல் பந்துவீச்சு! சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஊதித்தள்ளிய டெல்லி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மிட்ச்செல் ஸ்டார்க் 5 விக்கெட் வீழ்த்தினார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மிட்ச்செல் ஸ்டார்க் 5 விக்கெட் வீழ்த்தினார்.
IPL: Delhi Capitals beat Sunrisers Hyderabad: ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அபிஷேக் சர்மா முதல் ஓவரில் விப்ராஜ் நிகம் ரன் அவுட் ஆக்கப்பட்டு வெளியேறினார். ஸ்டார்க் மூன்றாவது ஓவரில் இஷான் கிஷன் (2) மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி (0) ஆகியோரை வெளியேற்றினார். இதனால் SRH 2.3 ஓவர்களில் 25/3 என தடுமாறியது.
மிட்செல் ஸ்டார்க் SRHக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி, இஷான் கிஷன் (2) மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி (0) ஆகியோரை மூன்றாவது ஓவரில் வெளியேற்றினார். SRH 2.3 ஓவர்களில் 25/3 என இருந்தது. டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாட முயன்று ஸ்டார்க் பந்துவீச்சில் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஹென்ரிச் கிளாசன் அனிகேத் ஜோடி சேர்ந்து 22 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தனர். அனிகேத் அக்சர் படேல் பந்துவீச்சில் இரண்டு சிக்ஸர்களை விளாசினார். பின்பு மோஹித் சர்மா கிளாசெனை 32 ரன்களில் வெளியேற்றினார். விப்ராஜ் நிகம் ஒரு அருமையான கேட்ச் பிடித்தார். தொடர்ந்து அபினவ் மனோகர் 4 ரன்னில் குல்தீப் யாதவ் பந்தில் காலியானார்.
Hardik Pandya: மீண்டும் அதே தவறு! ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை?
இதற்கிடையே அனிகேத் 34 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் தனது முதல் ஐபிஎல் அரை சதத்தை அடித்தார். அவர் 41 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். கடைசியில் பேட் கம்மின்ஸ் உள்ளிட்ட வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறியதால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 163 ரன்னில் அடங்கியது. ஸ்டார்க் 35 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்பு சவாலான இலக்கை துரத்திய டெல்லி அணியின் வீரர்கள் ஃபாஃப் டு பிளெஸ்ஸி மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக் குர்க் சன்ரைசர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். ஜேக் ஃபிரேசர் நிதானம் காட்ட
பாஃப் ஷமியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். சிறப்பாக விளையாடிய ஃபாஃப் டு பிளெஸ்ஸி 27 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்து ஜீஷன் அன்சாரி பந்தில் கேட்ச் ஆனார். தொடர்ந்து மெக் குர்க் 38 ரன்கள் எடுத்து ஜீஷன் அன்சாரி பந்தில் அவுட் ஆனார்.
கே.எல்.ராகுல் 15 ரன்னில் ஜீஷன் அன்சாரி பந்தில் கேட்ச் ஆனார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் போதிலும், டெல்லி வீரர்களான டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரல் ஹைதராபாத் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து அணியை வெற்றி பெற வைத்தனர். டெல்லி அணி 16 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. 5 விக்கெட் வீழ்த்திய மிட்ச்செல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருது வென்றார். டெல்லி அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றதுள்ளது. ஹைதராபாத் அணி 2 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.
MIக்கு 2 தோல்விகள் சகஜம்; டிராபி வெல்லும் வாய்ப்பு இருக்கிறது - சஞ்சய் மஞ்ச்ரேகர்!