Hardik Pandya: மீண்டும் அதே தவறு! ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை?
குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மெதுவாக பந்துவீசியதால் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மெதுவாக பந்துவீசியதால் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
MI captain Hardik Pandya has been fined: ஐபிஎல்லில் நேற்று குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் குஜராத டைட்டனஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 196 ரன்கள் எடுத்தது. பின்பு விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பவுலிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் மெதுவாக பந்துவீசியது. அதாவது கிட்டத்தட்ட 2 மணி நேரம் பந்துவீசியது. மெதுவாக பந்துவீசியதால் ஐபிஎல் விதிகளின்படி மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ''ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.2 இன் கீழ், குறைந்தபட்ச ஓவர்-ரேட் குற்றங்களுடன் தொடர்புடைய ஹர்திக் பாண்ட்யாவின் முதல் விதிமீறல் இதுவாக இருந்ததால் அவருக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது" என்று ஐபிஎல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
MIக்கு 2 தோல்விகள் சகஜம்; டிராபி வெல்லும் வாய்ப்பு இருக்கிறது - சஞ்சய் மஞ்ச்ரேகர்!
கடந்த ஐபிஎல் சீசனின் கடைசி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி மெதுவாக பந்துவீசியதால் நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்ட்யா ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக
சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா விளையாடவில்லை. இந்நிலையில் தான் அவருக்கு மீண்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு போட்டியில் இதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணி மெதுவாக பந்துவீசினால் ஹர்திக் பாண்ட்யாவுக்கு மேலும் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் என தகவல் பரவி வருகிறது.
ஆனால் அணிகள் இனிமேல் மெதுவாக பந்துவீசினாலும் அந்த அணியின் கேப்டனுக்கு போட்டியில் விளையாட தடை செய்யப்படமாட்டாது. இது தொடர்பாக ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் வைத்த கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுக் கொண்டுள்ளது. ஆகையால் மும்பை இந்தியன்ஸ் அணி இன்னும் ஒரு போட்டியில் மெதுவாக பந்துவீசினாலும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எந்த ஒரு தடையும் விதிக்கப்படாது. ஆனால் தொடர்ந்து மெதுவாக பந்துவீசும் அணிகளின் கேப்டன்களுக்கு கருப்பு புள்ளிகள் தொடர்ந்து சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத டைட்டன்ஸ்க்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் பவுலர்கள் 14 வைடுகள் வீசினார்கள். இதுவே அந்த அணி மெதுவாக பந்துவீசியதற்கான முக்கிய காரணமாகி விட்டது. அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 3 வைடுகளும், சத்யநாராயண ராஜு 4 வைடுகளும் வீசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
GT vs MI: சொல்லி அடித்த சுப்மன் கில் அண்ட் கோ! மும்பை இந்தியன்ஸ் அணி 2வது தோல்வி!