DC vs SRH IPL 2025 Playing 11 Predictions : டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025-ன் 10-வது போட்டி மார்ச் 30-ம் தேதி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கிறது. இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால், ஞாயிற்றுக்கிழமை மிகவும் ஸ்பெஷலாக இருக்கும். டெல்லி அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஹைதராபாத் அணி லக்னோவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இருப்பினும், SRH தனது முதல் ஆட்டத்தில் ராஜஸ்தானை வென்றது.
DC vs SRH Head to Head, Pitch Report
இது ஒரு புறம் இருந்தாலும் இன்று நடைபெறும் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு சாதகம், பிட்ச் ரிப்போர்ட் மற்றும் பிளேயிங் 11-ஐ பார்க்கலாம். விசாகப்பட்டினத்தில் பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டுவார்கள். விசாகப்பட்டினம் மைதானம் டெல்லிக்கு சாதகம் என்பதால் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட வாய்ப்புகள் இருக்கிறது. DC-க்கு இந்த சீசனில் விசாகப்பட்டினம் ஹோம் கிரவுண்ட். இங்கு பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். டெல்லி அணி கடைசியாக இதே மைதானத்தில் விளையாடியது.
SRH vs DC, Axar Patel and Pat Cummins
கடைசி நேரத்தில் டெல்லி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 44% போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. சேஸ் செய்த அணிகள் 55% போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இங்கு கேகேஆர் அணி 272 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 169 ஆகவும், இரண்டாவது இன்னிங்ஸில் 140 ஆகவும் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீசவே விரும்புவார்.
DC vs SRH, IPL 2025
டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் நேருக்கு நேர் மோதிய 10 ஐபிஎல் போட்டிகளில், DC 6 போட்டிகளிலும், SRH 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. டெல்லி அணி ஹைதராபாத்தை விட ஆதிக்கம் செலுத்தியுள்ளது. கடைசியாக இரு அணிகளும் ஏப்ரல் 20, 2024 அன்று மோதின. இதில் சன்ரைசர்ஸ் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியிலும் பெரிய ஸ்கோர் பார்க்க முடிந்தது. ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 266 ரன்கள் எடுத்தது.
IPL 2025, Indian Premier League 2025
டெல்லி அணி 199 ரன்கள் எடுத்தது. 18-வது சீசனின் புள்ளிகள் பட்டியலில், DC ஒரு போட்டியில் ஒரு வெற்றியுடன் +0.371 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது. SRH 2 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் -0.128 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் உள்ளது.
DC Playing 11 Predictions
டெல்லி கேபிடல்ஸ் பிளேயிங் 11:
ஜேக் ஃபிரேசர் மெக்ர்க, ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), கே.எல்.ராகுல், அக்ஷர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அஷூதோஷ் சர்மா, மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், மோகித் சர்மா.
DC vs SRH, IPL 2025, SRH Playing 11 Predictions
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் 11:
டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிக் கிளாசென், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், முகமது ஷமி, ஆடம் ஜாம்பா, ஜெய்தேவ் உனட்கட், சிமர்ஜீத் சிங்.