
ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழாவில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ். தனது ஹோம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 3ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதே போன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் பரிதாபமாக தோற்றது.
இந்த போட்டியில் சிஎஸ்கே அடுக்கடுக்கான பல தவறுகளை செய்ததே தோல்விக்கான காரணமாக சொல்லப்பட்டது. அதில் முதலாவதாக டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து பீல்டிங்கில் பல கேட்சுகளை தவறவிட்டது. இறுதியாக பேட்டிங்கில் சொதப்பியது. மேலும், தோனியின் பேட்டிங் ஆர்டர் மாற்றப்பட்டது. இப்படி அடுக்கடுக்கான தவறுகளை சிஎஸ்கே செய்த நிலையில் இன்று முதலாவதாக அவே போட்டியில் விளையாடுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஹோம் மைதானம் என்று சொல்லப்படும் குவஹாத்தி பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 11ஆவது லீக் போட்டியில் சிஎஸ்கே விளையாடுகிறது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெறும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு காரணம், ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய 2 போட்டியிலும் தோல்வியை தழுவியது. ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி 242 ரன்கள் குவித்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதே போன்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய கொல்கத்தா 153/2 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த மைதானம் ஸ்பின்னர்களுக்கு சாதகமான மைதானம் என்பதால், இந்த மைதானத்தில் அதிக ரன்கள் குவிப்பது என்பது கடினமானது. சிஎஸ்கே மற்றும் ஆர் ஆர் அணிகள் 29 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், அதிகமாக சிஎஸ்கே தான் வெற்றி பெற்றிருக்கிறது. அதுவும், 16 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. அதிகமாக 246 ரன்களும் குறைந்தபட்சமாக 109 ரன்களும் எடுத்துள்ளது.
இதே போன்று தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 13 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் அதிகபட்சமாக 223 ரன்களும், குறைந்தபட்சமாக 126 ரன்களும் எடுத்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்ற நிலையில் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிய 2 போட்டியிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
ஆனால், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் விளையாடிய போட்டிகளில் முறையே ராஜஸ்தான் 6 போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலமாக இந்த போட்டியானது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் போட்டியானது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சிஎஸ்கேயின் சுழற்பந்து வீச்சாளரான நூர் அகமது அதிக விக்கெட்டுகள் குவிக்க வாய்ப்புகள் இருக்கிறது. அதோடு, ரன்கள் குவிப்பது சற்று கடினமானதாக இருக்கலாம். 2ஆவது இன்னிங்ஸில் விளையாடும் பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புகள் இருக்கிறது.
இந்த மைதானத்தைப் பொறுத்த வரையில் முதல் பேட்டிங்கை விட 2ஆவது பேட்டிங் செய்வது தான் அதிக வெற்றிகளை பெற்று கொடுத்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்த வரையில் ராகுல் திரிபாதி மற்றும் தீபக் ஹூடா ஆகியோரில் யாரேனும் ஒருவர் பெஞ்சில் உட்கார வைக்கப்படலாம். மேலும், டெவோன் கான்வே அல்லது விஜய் சங்கர் ஆகியோரில் யாரேனும் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் 11:
ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே/ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஷிவம் துபே, தீபக் ஹூடா/விஜய் சங்கர், சாம் கரண், ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பதிரனா.
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் 11:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரியான் பராக் (கேப்டன்), நிதிஷ் ராணா, துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், ஷூபம் துபே, வணிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, குமார் கார்த்திகேயா.
உங்களுக்கு தெரியுமா?
2021ஆம் ஆண்டுக்கு பிறகு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சிஎஸ்கே 175 ரன்களுக்கு மேலான இலக்கை சிஎஸ்கே சேஸ் செய்ததில்லை.
2023 ஆம் ஆண்டு முதல் குவஹாத்தியில் ராஜஸ்தான் விளையாடிய 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. 3 போட்டியில் தோல்வியை தழுவியது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
இந்த சீசனில் சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.
2023 ஆம் ஆண்டு முதல் 23 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய தீபக் ஹூடா 13 போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.