SRH vs PBKS: வாழ்வில் மறக்க முடியாத மோசமான சாதனை படைத்த முகமது ஷமி!

Published : Apr 13, 2025, 10:28 AM IST

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் முகமது ஷமி மோசமான சாதனை படைத்தார்.

PREV
14
SRH vs PBKS: வாழ்வில் மறக்க முடியாத மோசமான சாதனை படைத்த முகமது ஷமி!

Mohammed Shami worst record  in IPL: ஐபிஎல் தொடரில் ஹைதராபாத்தில் நேற்று நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 245 ரன்கள் குவித்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 36 பந்தில் 82 ரன்கள் அடித்தார். பின்பு இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 18.3 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 247 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

24
Mohammed Shami, SRH, IPL

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மா வெறும் 55 பந்தில் 141 ரன்கள் அடித்து ஆட்டநாயாகன் விருது பெற்றார். இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றாலும் அந்த அணியின் பவுலிங் மிக மோசமாக இருந்தது. அதிலும் அனுபவ வீரர் முகமது ஷமி 4 ஓவர்களில் 75 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. ஒரு ஓவருக்கு சராசரியாக 18 ரன்கள் விட்டுக்கொடுத்த அவர் தனது பவுலிங்கில் 6 பவுண்டரி, 7 சிக்சர்களை விட்டுக்கொடுத்தார்.

அதுவும் ஷமியின் கடைசி ஓவரில் பஞ்சாப் வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் தொடர்ந்து 4 சிக்சர்கள் விளாசி மிரள வைத்தார். நேற்றைய போட்டியின் மூலம் முகமது ஷமி ஐபிஎல்-இல் (IPL 2025) ஒரு போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களில் அதிக ரன்கள் கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார். 2024 ஐபிஎல்-இல் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் மோகித் சர்மா டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிராக 73 ரன்கள் கொடுத்தார். நேற்று அந்த மோசமான சாதனையை முகமது ஷமி முறியடித்தார்.

SRH vs PBKS: அபிஷேக் சர்மா துண்டுச்சீட்டில் எழுதியிருந்தது என்ன? ஏன் இப்படி கொண்டாடினார்?

34
SRH vs PBKS, Cricket

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக முகமது ஷமியின் எகானமி ரேட் 18.80. அன்று அவர் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முகமது ஷமியின் பந்துவீச்சில் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தாராளமாக ரன்கள் குவித்தனர். நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக 76 ரன்கள் கொடுத்தார். நல்ல வேளையாக இந்த மோசமான சாதனையை ஷமி ஒரு ரன்னில் தவற விட்டார். 

44
IPL 2025, Mohammed Shami, Record

2018 ஐபிஎல்-இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பாசில் தம்பி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக 70 ரன்கள் கொடுத்தார். 2023 ஐபிஎல்-இல் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் யாஷ் தயாள் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக 69 ரன்கள் கொடுத்தார். ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடரில் முகமது ஷமி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான பவுலர் ஆவார். எனவே ஷமி ஃபார்முக்கு திரும்புவது அவசியமாகியுள்ளது.

ஐபிஎல் 2025 தொடரில் கோடிகளில் பரிசு மழை! சாம்பியன் அணிக்கு எவ்வளவு கிடைக்கும்?

Read more Photos on
click me!

Recommended Stories