உப்பலில் அடித்தால் பஞ்சாபில் விழும் அளவுக்கு சிக்ஸர் அடித்த அபிஷேக் சர்மா
ஐபிஎல் 2025 போட்டியில் ஹைதராபாத்தில் உள்ள உப்பல் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்கள், பிரபுசிம்ரன் 42 ரன்கள் எடுத்தனர்.
246 ரன்கள் இலக்கை துரத்திய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஓப்பனர்கள் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் அதிரடியான தொடக்கம் கொடுத்தனர். அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 7 ஓவர்களில் ஹைதராபாத் அணி 93 ரன்கள் எடுத்தது. 10 ஓவர்களில் 143/0 ரன்கள் எடுத்தது.
அபிஷேக் சர்மா 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். இது ஐபிஎல் 2025-ல் இரண்டாவது அதிவேக அரைசதம் ஆகும். பின்னர் மேலும் அதிரடியாக விளையாடி பவுண்டரிகள், சிக்ஸர்கள் அடித்து சதம் அடித்தார். 40 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். ஐபிஎல் வரலாற்றில் 6-வது அதிவேக சதம் அடித்த வீரர் ஆனார். மொத்தம் 141 ரன்கள் குவித்த இன்னிங்சில் 14 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் அடித்தார்.