காயம் காரணமாக வெளியேறிய ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக அணியில் இடம்பெற உள்ள ராகுல் திரிபாதி ஃபார்மில் இல்லை. ரச்சின் ரவீந்திரா - டெவான் கான்வேயின் தொடக்க ஆட்டம் சென்னையின் ஸ்கோரை நிர்ணயிக்கும். ஷிவம் துபே மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் மிடில் ஆர்டரில் தடுமாறுகிறார்கள். சேப்பாக்கம் மைதானத்தின் ஸ்பின் ஆடுகளத்தில் நூர் அகமதுவின் ஸ்பின் பந்துவீச்சு மட்டுமே நம்பிக்கை அளிக்கிறது. எனவே, அணியின் வரிசையில் தோனி சில மாற்றங்களைச் செய்யக்கூடும். மீண்டும் தல கேப்டனாகிறார்.
CSK Vs KKR
இன்று சேப்பாக்கம் மைதானத்தில் மஞ்சள் நிற ரசிகர்கள் அலைமோதக்கூடும். கடந்த போட்டியில் தோனி அடித்த சிக்ஸர்களை ரசிகர்கள் இன்றும் எதிர்பார்க்கலாம். ஆனால், இதுவரை செட் ஆகாத சிஎஸ்கே பிளேயிங் லெவனை வைத்து தோனி என்ன அதிசயம் செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இன்னும் ஒரு தோல்வியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2025-ல் தாங்க முடியாது. கடைசி போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸிடம் தோற்றாலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை குறைத்து மதிப்பிட முடியாது. பலர் ஃபார்மில் இல்லாவிட்டாலும் குயின்டன் டி காக், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், மொயின் அலி, வருண் சக்கரவர்த்தி, ரிங்கு சிங், வெங்கடேஷ் ஐயர் என பல அதிரடி வீரர்கள் நிறைந்த அணி கேகேஆர். கேப்டன் அஜிங்க்ய ரஹானே நல்ல ஃபார்மில் உள்ளார்.