வடக்கு ராஜஸ்தானில் உள்ள சாதுல்பூர் கிராமத்தில் பிறந்த லட்சுமி மிட்டலுக்கு, இந்த ஒப்பந்தம் தனிப்பட்ட முறையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதுபற்றி அவர் கூறும்போது, "எனக்கு கிரிக்கெட் மீது அதிக பிரியம் உண்டு. என் குடும்பத்தின் பூர்வீகம் ராஜஸ்தான். அதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைத் தவிர வேறு எந்த ஐபிஎல் அணியின் ஒரு பகுதியாக இருக்க நான் விரும்பியதில்லை.
நான் மாணவனாக இருந்தபோதே கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன், அன்று முதல் இந்த விளையாட்டின் தீவிர ரசிகன். பல வீரர்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் ஜெர்சியை அணிந்து விளையாடியுள்ளனர். அவர்கள் இளம் திறமையாளர்களுக்கு உத்வேகமாக இருக்கிறார்கள். இந்த சிறந்த அணியின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ரசிகர்களுடன் சேர்ந்து மைதானத்தில் நமது வெற்றிகளைக் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்றார்.
ஆதித்யா மிட்டல் சொல்வது என்ன?
மேலும் ஆதித்யா மிட்டல் கூறுகையில், ''மிகக் குறுகிய காலத்தில் ஐபிஎல் உலகின் மிகப்பெரிய விளையாட்டு லீக்குகளில் ஒன்றாக மாறியுள்ளது; ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த லீக்கின் பழமையான மற்றும் மிக முக்கியமான அணிகளில் ஒன்றாகும். தனிப்பட்ட முறையில், இந்த சிறந்த அணியின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் பெருமையும் உற்சாகமும் அடைகிறேன்.
இளம் திறமைகளை வளர்ப்பதில் 'ராயல்ஸ்' அணிக்கு நல்ல பெயர் உள்ளது. அந்த பாரம்பரியம் தொடரும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ராஜஸ்தான் ராயல்ஸை ஒரு உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு நிறுவனமாக மாற்ற உதவிய வீரர்கள், பயிற்சியாளர்கள், தலைமை மற்றும் மிக முக்கியமாக ரசிகர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த அணியின் பாரம்பரியத்தை நாங்கள் தொடர்வோம், அதை மேலும் வளப்படுத்துவோம்'' என்றார்.