Mitchell Marsh vs Jasprit Bumrah
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்து விட்டன. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இமாலய வெற்றி பெற்றது. அதே வேளையில் 2வது பிங் பால் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பேட்ஸ்மேன்களை விட பவுலர்களே ஆதிக்கம் செலுத்தினார்க்ள். இரண்டு அணிகளிலும் உள்ள பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினாலும் இதில் முதல் முதல் இடத்தில் இருப்பவர் ஜஸ்பிரித் பும்ரா.
India vs Australia Test series
முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய பேட்டிங்கின் முதுகெலும்பை முறித்த பும்ரா, 8 விக்கெடுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். இரண்டாவது டெஸ்ட்டில் இந்தியா தோல்வி அடைந்தாலும் 4 விக்கெட் வீழ்த்தி சிறப்பான பவுலிங்கை பதிவு செய்தார் பும்ரா. பொதுவாக எந்த ஒரு பவுலரும் புது பால் கையில் எடுக்கும்போது சிறப்பாக பந்து வீசுவார்; விக்கெட்களை எளிதாக சாய்ப்பார். பின்பு பந்தும், பிட்ச்சும் தேய்ந்தும் பழசான பிறகு விக்கெட் எடுக்க திணறுவார்.
ஆனால் பும்ரா புது பந்தாக இருந்தாலும் சரி, பழைய பந்தாக இருந்தாலும் சரி கேப்டன் பந்தை கையில் கொடுத்தால் விக்கெட் எடுத்து கொடுத்து விடுவார். முதல் இரண்டு டெஸ்ட்டிலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார் பும்ரா. அவர் பந்து இன் ஸ்விங்காக உள்ளே வருகிறதா? இல்லை அவுட் ஸ்விங்காக வெளியே செல்கிறதா? என கணிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர்.
ஜெய்ஸ்வால் செயலால் கடுப்பான ரோகித் சர்மா; பேருந்தில் தனியாக சென்ற வீரர்கள்; என்ன நடந்தது?
Jasprit Bumrah Bowling
காலம் காலமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் என்றாலே சச்சின், டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமண், புஜாரா ஆகிய பேட்ஸ்மேன்கள் ரன் குவித்து விடுவார்களோ, இவர்களை சீக்கிரம் விக்கெட் எடுக்க வேண்டும் என ஆஸ்திரேலியர்களுக்கு பயம் இருந்து வந்தது. ஆனால் வரலாற்றில் முதன் முறையாக ஒரு பவுலரை பார்த்து ஆஸ்திரேலியர்கள் பயப்படும்படி பும்ரா கொண்டு வந்து விட்டார்.
இந்த தொடரில் விராட் கோலி என்னும் நட்சத்திர வீரர் இருந்தும் அவரை பார்த்து ஆஸ்திரேலிய வீரர்கள் பயப்படவில்லை. அவுட் சைட் ஸ்டெம் பால் போட்டால் கோலி விக்கெட்டை எளிதாக எடுக்கலாம் என அவர்களுக்கு தெரிகிறது. ஆனால் அவர்களின் பயம் எல்லாமே பும்ரா பற்றிதான். பும்ரா பந்தை விக்கெட் இழக்காமல் சமாளித்து விட்டால் போதும், மற்ற பவுலர்களை ஈசியாக சமாளித்து விடலாம் என்பதுதான் அவர்களின் கணக்கு.
Jasprit Bumrah wickets
இந்நிலையில், பும்ராவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் பிளான் என்ன? என்பது குறித்து அந்த அணியின் வீரர் மிட்ச்செல் மார்ஷ் வெளிப்படையாக பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ''பும்ரா உலகின் மிகச் சிறந்த பவுலர். நாம் விக்கெட்டை இழந்து விடக்கூடாது என அவரது பந்தை தற்காத்துக்கொள்ளும்போதுதான் நீங்கள் விக்கெட் இழப்பிற்கு உள்ளாகிறீர்கள்.
ஆகவே பும்ராவுக்கு எதிராக நிதானம் காட்டாமல் அவரது பந்தை அடித்து ஆட முயற்சிக்க வேண்டும். என்னையும் பும்ரா அவுட்டாக்க அட்டாக் செய்வார். ஆனால் நான் அதை முறியடித்து எனது சொந்த வழியில் எதிர்தாக்குதல் மேற்கொள்ள வேண்டும். எங்களுடைய பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரும் பும்ராவுக்கு எதிராக இதே பாணி ஆட்டத்தை வெளிப்படுத்த தான் முயற்சி செய்வார்கள்'' என்றார்.
ஷாருக்கானின் முதல் சாய்ஸ் KKR இல்லை; ரூ.1,723 கோடி மதிப்புடைய இந்த அணிதான்; எந்த டீம்?