Sanju Samson: 'சஞ்சு சாம்சனுக்கு ஈகோ அதிகம்'; விளாசித் தள்ளிய தமிழ்நாடு முன்னாள் வீரர்!

கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் இங்கிலாந்து தொடரில் படுமோசமாக விளையாடி இந்திய அணியில் தனது வாய்ப்பை இழந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு  ஈகோ அதிகம் என்று முன்னாள் வீரர் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார், 

Krishnamachari Srikkanth has criticized Sanju Samson for having too much ego ray
Sanju Samson: 'சஞ்சு சாம்சனுக்கு ஈகோ அதிகம்'; விளாசித் தள்ளிய தமிழ்நாடு முன்னாள் வீரர்!

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் சஞ்சு சாம்சனின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. சஞ்சு சாம்சன் 5 போட்டிகளில் வெறும் 51 ரன்களே அடித்தார். இந்த 5 போட்டிகளிலும் அவர் ஒரே மாதிரியாக ஷாட் பிட்ச் பந்தில் தான் அவுட்டாகியுள்ளார்.

அதாவது முதல் மூன்று மேட்ச்களில் தொடர்ந்து ஆர்ச்சர் வீசிய ஷார்ட் பிட்ச் பந்திலும், 4வது போட்டியில் மம்மூத் ஷார்ட் பிட்ச் பந்திலும், 5வது போட்டியில் மார்க் வுட் ஷார்ட் பிட்ச் பந்திலும் அவுட்டானர். இந்த பால்கள் ஒரே மாதிரியாக வீசப்பட்டன. சஞ்சு சாம்சனும் அந்த பந்துகளை நேராக பீல்டர் கையில் அடித்து விட்டு பெவிலியன் திரும்பினார். இந்த 5 போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் கூட அவர் ஷாட்பிட்ச் பந்தில் தவறிழைப்பதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை.

Krishnamachari Srikkanth has criticized Sanju Samson for having too much ego ray
சஞ்சு சாம்சன்

இந்த தொடர் முழுவதும் கிடைத்த வாய்ப்பை சஞ்சு சாம்சன் கோட்டை விட்டுள்ளார். ஏற்கெனவே அவர் டெஸ்ட் மற்றும் ஓடிஐகளில் சேர்க்கப்படுவதில்லை. இப்போது டி20 போட்டிகளிலும் மோசமாக விளையாடி இருப்பதால் இனிமேல் அவரால் இந்திய அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பு குறைவாகும். சஞ்சு சாம்சன் இங்கிலாந்து ஓடிஐ தொடரிலும், சாம்பியன்ஸ் டிராபியிலும் சேர்க்கப்படவில்லை. இதற்காக பிசிசிஐயை கண்டித்தவர்கள், இப்போது சஞ்சு சாம்சனின் மோசமான பேட்டிங்கால் அவரை விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு ஈகோ அதிகம் என்று இந்திய முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைமை தேர்வாளருமான தமிழ்நாட்டை சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், ''இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பேட்டிங்கை சிறப்பாகச் செய்யத் தவறியதால் சஞ்சு சாம்சன் இனி இந்திய அணியில் இடம்பிடிப்பது கஷ்டம்.

சஞ்சு சாம்சன் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா? தனக்குத் தானே 'ஆப்பு'; வெளியான தகவல்!


கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

சஞ்சு சாம்சன் இந்த தொடரில் தொடர்ந்து 5வது முறையாக ஒரே மாதிரியான ஷாட்டில் அவுட்டானார். அவர் தனது ஈகோவைக் காட்ட முயற்சிக்கிறார் என்று நினைக்கிறேன். எத்தனை முறை ஷார்ட் பந்தில் அவுட்டானாலும் 'இல்லை, இல்லை, நான் இந்த ஷாட்டை தான் விளையாடுவேன் என அவர் தனது ஈகோவுடன் சென்றார். அவர் தனது ஈகோ பயணத்தில் செல்கிறாரா? அல்லது இந்திய அணியில் இடம்பிடிக்க போராடுகிறாரா? என்பது தெரியவில்லை. 
 

சஞ்சு சாம்சன் மோசமான பேட்டிங்

சாம்பியன்ஸ் டிராபி அணியில் அவர் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பது பற்றி நாங்கள் பேசினோம். அது  மிகவும் வருத்தமாக இருந்தது. நான் ஏமாற்றமடைந்தேன். ஆனால் அவர் தொடர்ந்து இப்படி விளையாடினால் நன்றி சொல்லி அனுப்பி விடலாம்.யஷஸ்வி ஜெய்ஸ்வால் திரும்பிவிட்டார். அவர் இனிமேல் டி20 போட்டிகளில் தொடர்ந்து களமிறங்கி விடுவார்'' என்றார்.

IND vs ENG ODI: ஓடிஐ தொடர் அட்டவணை; போட்டிகள் தொடங்கும் நேரம்? எந்த டிவியில் பார்க்கலாம்?

Latest Videos

click me!