KKR vs RCB: ஐபிஎல் முதல் போட்டி ரத்து செய்யப்பட வாய்ப்பு! என்ன காரணம்?

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில்,  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான முதல் போட்டி ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
 

KKR vs RCB: IPL first match likely to be cancelled ray

IPL: KKR vs RCB match likely to be cancelled: உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 2025 தொடர் நாளை (மார்ச் 22ம் தேதி) முதல் தொடங்க இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்ச்ர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 10 அணிகள் மோதுகின்றன. மொத்தம் 78 லீக் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. மே 25ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. 

KKR vs RCB: IPL first match likely to be cancelled ray
KKR vs RCB Match

நாளை தொடங்கும் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. ஐபிஎல் தொடக்க போட்டிக்கு முன்னதாக கலைநிகழ்ச்சிகளும் நடைபெற திட்டமிட்டு இருந்தது. திஷா பதானி மற்றும் ஸ்ரேயாஸ் கோசல் உள்ளிட்ட பலர் லைவ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் முதல் போட்டி நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

ஐபிஎல் GOAT இவங்கதான்! IPL ஆல் டைம் பிளேயிங் லெவன்! கேப்டன் யார் தெரியுமா?


IPL 2025

அதாவது முதல் போட்டி நடைபெறும் கொல்கத்தாவில் நளை பலத்த மழை கொட்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தெற்கு வங்காளத்தில் இடியுடன் கூடிய மழை மற்றும் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. மார்ச் 22 ஆம் தேதி, ஐபிஎல் 2025 தொடக்க நாளில், ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்யூவெதர் கருத்துப்படி, சனிக்கிழமை கொல்கத்தாவில் மழை பெய்ய 74% வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் மேகமூட்டம் 97% ஆக இருக்கும். மாலையில் மழை பெய்ய வாய்ப்பு 90% ஆக அதிகரிக்கிறது. எனவே, 18வது ஐபிஎல் போட்டியின் தொடக்க நாளில் ஈடன் கார்டன்ஸ் ஏராளமான மழை பெய்யும் என்பது கிட்டத்தட்ட உறுதி. கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகள் போதுமான ஓவர்கள் விளையாட முடியுமா என்று இப்போது சொல்வது கடினமாகும்.

Kolkata Eden Gardens

ஈடன் கார்டன்ஸில் ஏற்கெனவே ஒரு போட்டி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 6 ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான நைட் ரைடர்ஸ் அணியின் சொந்த மைதான ஆட்டம் கவுகாத்திக்கு மாற்றப்பட உள்ளது, ஏனெனில் அன்று கொல்கத்தாவில் 'ராம நவமி' கொண்டாட்டங்கள் இருப்பதால் ஐபிஎல் போட்டிக்கு பாதுகாப்பு வழங்க இயலாமையை போலீசார் வெளிப்படுத்தியுள்ளனர் என்று சிஏபி தலைவர் சினேகாஷிஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

IPL New Rules: இனி வைடு பால் சிக்கல் இல்லை! ஐபிஎல்லில் அதிநவீன தொழில்நுட்பம்!

Latest Videos

vuukle one pixel image
click me!