ஆர்சிபி அணியின் வெளிநாட்டு வீரர்களான பில் சால்ட், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டோன், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், லுங்கி நிகிடி ஆகியோர் ஏற்கெனவே அணியில் இணைந்தனர். ஆனால் அந்த அணியின் துருப்புச்சீட்டாக இருக்கும் பாஸ்ட் பவுலர் ஜோஸ் ஹேசில்வுட் இந்தியா திரும்பாமல் இருந்து வந்தார்.
தோள் பட்டையில் ஒரு சிறிய காயம் காரணமாக சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியிலும், ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியிலும் ஹேசில்வுட் விளையாடவில்லை.
ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சி
ஆஸ்திரேலியா சென்ற அவர் மீண்டும் எப்போது இந்தியா திரும்புவார்? என ஆர்சிபி ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஜோஸ் ஹேசில்வுட் மீண்டும் ஆர்சிபி அணியுடன் இணைந்துள்ளார். அவர் ஆர்சிபி அணியுடன் இணையும் வீடியோவை ஆர்சிபி நிர்வாகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் 'ஆர்சிபி ரசிகர்களே! ஐ அம் பேக்' என்று ஹேசில்வுட் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.