இதையடுத்து இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இதையும் படியுங்கள்... IND vs SA: அபாரமான அரைசதம் அடித்து கடைசிவரை கடுமையாக போராடிய சஞ்சு சாம்சன்..! முதல் ODI-யில் இந்தியா தோல்வி
அந்த பதிவில், “உன்னை ரொம்ப மிஸ் பண்கிறேன் ஸ்கட். மிகப்பெரிய மனம்படைத்தவள் நீ. எப்போது முகத்தில் புன்னகையுடனும், நேர்மறை எண்ணங்களுடனும் இருக்கும் நீ வேற லெவல். குறும்புத்தனமான பக்கமும் உனக்கு உண்டு. உன்னுடைய பயணத்தில் ஒவ்வொரு நபரையும், ஒவ்வொரு சவாலையும் எதிர்கொண்ட நீ, ஒவ்வொரு தருணத்தையும் எப்படி நேசிப்பது என்பதை எனக்கு கற்றுத்தந்தாய். உன்னுடன் பயணம் மேற்கொண்டதை நினைத்து நெகிழ்கிறேன். ஐ லவ் யூ” என உருக்கமான பதிவிட்டிருந்தார்.