கடந்த இரண்டு பருவங்களாக HCA தனது ஊழியர்களுக்கு கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த விஷயத்தை HCA வின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகும் தீர்வு காணப்படவில்லை என்றும் அவர் கூறினார். HCAவின் நடத்தையைப் பார்க்கும்போது, SRH இந்த ஸ்டேடியத்தில் விளையாடக் கூடாது என்ற எண்ணத்தில் இருப்பதாகத் தெரிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது உண்மையாக இருந்தால், பிசிசிஐ, தெலுங்கானா அரசு மற்றும் எங்கள் நிர்வாகத்துடன் விவாதித்து ஹைதராபாத்தை விட்டு வெளியேறி புதிய இடத்தைத் தேடுவோம் என்றும் எஸ்ஆர்எச் பொது மேலாளர் (விளையாட்டு) ஸ்ரீநாத் எச்சரித்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக எச்.சி.ஏ.யுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். கடந்த சீசனில் இருந்து தான் இந்த பிரச்சனைகளையும், தொல்லைகளையும் சந்தித்து வருகிறோம் என்றார்.
மேலும் SRH பொது மேலாளர் (விளையாட்டு) ஸ்ரீநாத் ஒரு அறிக்கையில், முன்பு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு சீசனிலும் அவர்களுக்கு 50 இலவச டிக்கெட்டுகள் (F12A பெட்டி) வழங்கப்படுகின்றன.